உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்குட்டா யூரோப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுக்குட்டா யூரோப்பியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
தரப்படுத்தப்படாத:
வித்திலையிகள்
தரப்படுத்தப்படாத:
யுடிகாட்ஸ்
தரப்படுத்தப்படாத:
ஆசுட்டெரிடுசு
வரிசை:
சொலனேல்சு
குடும்பம்:
கன்வோல்வுலேசியே
பேரினம்:
கசுக்குட்டா
இனம்:
க . யூரோப்பியா
இருசொற் பெயரீடு
கசுக்குட்டா யூரோப்பியா
L.

கசுக்குட்டா யூரோப்பியா (தாவரவியல் பெயர்:Cuscuta europaea) ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகை ஒட்டுண்ணி தாவரம். இது கான்வோல்வுலேசியே குடும்பத்தை சார்ந்தது. ஆனால் இது முன்னர் கசுக்குட்டேசி குடும்பத்தில் இருந்தது.[1]

இது ஆஸ்ட்டிரேசி, கனபேசியே, செனோபோடியேசியே, ஃபேபேசியே,யுட்ரிகேசியே போன்ற தாவரங்களின் மீதும் கோலியசு, இம்பேட்டின்சு போன்ற தோட்டத் தாவரங்கள் மீதும் வளர்கிறது. இது  உலூசிமினேவின் (மெடிகாகோ சட்டைவா) குறிப்பிடத்தக்க ஒட்டுண்ணியாகும்.[2]

விவரிப்பு

[தொகு]

கசுக்குட்டா யூரோப்பியா நீண்ட மெல்லிய  மஞ்சள் அல்லது சிவப்பு நிறத் தண்டுகளைப் பெற்றுள்ளது. இவற்றின் தண்டுகளின் பக்கவாட்டில் மஞ்சரி உருவாகிறது .குறைவான எண்ணிக்கை முதல் அதிக எண்ணிக்கையிலான மலர்கள் கிண்ணம் போன்ற சிறிய குஞ்சத்தில் அல்லது மஞ்சரியில் வரிசையாக அமைந்துள்ளன. இதன் பூக்காம்பு 1.5 மிமீ நீளம் வரை இருக்கும். 1.5 மிமீ அளவுள்ள கோப்பை வடிவமான புல்லிவட்டம், முக்கோண-முட்டை வடிவத்தில் 4 அல்லது 5 பூவிதழ்களைக் கொண்டது. 2.5-3 மிமீ அளவிலான இளஞ்சிவப்பான அல்லிவட்டம் , 4 அல்லது  5 இதழ்களை கொண்டது.மலரும் பருவம் முடிந்த பின்னும் அல்லிவட்டம் காணப்படும். மேலும் மகரந்தத்தாள் உட்பொதிந்து  மகரந்த இழைகள் மகரந்தப்பையை விட நீண்டு காணப்படும்.மகரந்தப்பை முட்டை வடிவத்துடன் மிக மெல்லிய செதில்களுடன் உள்ளன. கோளவடிவக் கருப்பை இருவிதத்தில் உள்ளது.சூல் முடி மாறுபட்டு வளைந்திருக்கும். 3 மிமீ அகன்ற, வட்ட வடிவ விதையுறை வாடிய அல்லிவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதையுறைக்குள்ளும் பொதுவாக நான்கு வெளிர் பழுப்பு, நீள்வட்ட,1 மிமீ நீளமுள்ள விதைகள் உள்ளன.[3] [4]

காணப்படும்  இடங்கள்

[தொகு]

கசுக்குட்டா யூரோப்பியா தற்போது ஜப்பான், காஷ்மீர், வட ஆப்பிரிக்கா,மேற்கு ஆசியா ம்ற்றும் ஐரோப்பாவில் காணப்படுகிறது;  (பாகிஸ்தான் உட்பட), வெகு அரிதாக வட, தென் அமெரிக்காவிலும் காணப்படுகிறது.

சொற்பிறப்பியல்

[தொகு]

கசுக்குட்டா என்ற இத்தாவரத்தின் பெயர் அரேபியச் சொல்லான  'kechout'  என்பதில் இருந்து பெறப்பட்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு தாவரவியலாளரான உரூபினசு என்பவரால் பயன்படுத்தப்பட்டது. யூரோப்பியா என்பதன் பொருள்  'ஐரோப்பிய' அல்லது 'ஐரோப்பா' என்பதாகும்.

பார்வை

[தொகு]
  1. Poland J, Clement EJ. 2020. Vegetative Key to the British Flora. John Poland, Southamption, Second Edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9560-1442-9
  2. O'Neill, Alexander; Rana, Santosh (2017-07-16). "An ethnobotanical analysis of parasitic plants (Parijibi) in the Nepal Himalaya". Journal of Ethnobiology and Ethnomedicine 12 (14): 14. doi:10.1186/s13002-016-0086-y. பப்மெட்:26912113. 
  3. "European dodder (Cuscuta europaea". Plantwise Knowledge Bank. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
  4. http://www.efloras.org/florataxon.aspx?flora_id=2&taxon_id=200018814

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்குட்டா_யூரோப்பியா&oldid=3932723" இலிருந்து மீள்விக்கப்பட்டது