கவியூர் ரேவம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவியூர் ரேவம்மா
பிறப்பு14 ஏப்ரல் 1930 (1930-04-14) (அகவை 94)
கவியூர்
இறப்பு13 மே 2007
தொழில்(கள்)கருநாடக குரல் பாடகி

 

கவியூர் சி. கே. ரேவம்மா (Kaviyoor Revamma-14 ஏப்ரல் 1930 கவியூரில் - 13 மே 2007 கொல்லத்தில் ) பிறந்த ஒரு பிரபலமான கருநாடக பாடகி ஆவார். எட்டு வயதில் கருநாடக இசை கற்கத் தொடங்கிய ரேவம்மா, 16 வயதில் அருவிபுரத்தில் இசைக்கலைஞராக வாழ்க்கையினைத் தொடங்கினார்.

இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளில் முதல் இடத்தைப் பெற்ற பிறகு, கேரளப் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார். கேரள பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரேவம்மா ஆவார். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு இவர் இசைத் துறையின் தலைவராக ஆனார். திருச்சூர் அரசு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய ரேவம்மா, கல்லூரிக் கல்வி துணை இயக்குநராக ஓய்வு பெற்றார்.

ஜீவிதா நௌகா, நவலோகம், நீலக்குயில், சசிதரன், பொங்காதிர், செச்சி உள்ளிட்ட பல படங்களில் ரேவம்மா பாடியுள்ளார். இவரது முதல் படம் சசிதரன். ரேவம்மா, பி. லீலா மற்றும் ஜிக்கி (கிருஷ்ணவேணி) ஆகியோர் கடந்த கால மலையாளப் படங்களின் பாடும் மூவரும் என்று அறியப்பட்டனர். 1950களில் ஜீவிதா நௌகா, நவலோகம், நீலக்குயில், சசிதரன், பொங்காதிர் மற்றும் செச்சி போன்ற இசை வெற்றிப் படங்கள் உட்படச் சுமார் 20 மலையாளப் படங்களில் ரேவம்மா பாடியுள்ளார். ஏ. எம். ராஜாவுடனான இவரது ஜோடிப் பாடல், அவான் மாறண் திரைப்படத்தில் நீ என் சந்திரனே, நான் நின் சந்திரிகா மற்றும் அன்புதன் பொன்னம்பல்தில் போன்ற பழைய பாடல்கள் கேட்பவர்களைக் கொள்ளைக் கொள்ளும். ரேவம்மா பின்னர் இசையில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்.

திருவனந்தபுரம் இசைக் கல்லூரியிலிருந்து கணபுசனம் பெற்ற இவர், கேரளா, கோழிக்கோடு மற்றும் எம். ஜி. பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் கற்பித்துள்ளார். இவர் யு. சி. எல். ஏ. வில் இன-இசைவியலில் தனது முதுகலை படிப்பை முழு உதவித்தொகையுடன் முடித்தார். ரேவம்மா அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Sangeetha Nataka Akademi Award: Classical Music". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவியூர்_ரேவம்மா&oldid=3912712" இலிருந்து மீள்விக்கப்பட்டது