கவிதா பாலகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கவிதா பாலகிருட்டிணன்

தொழில் விரிவுரையாளர், எழுத்தாளர், கவிஞர், ஆராய்ச்சியாளர், ஓவியர், கலைக்காப்பாளார்
நாடு இந்தியன்
கல்வி நுண்கலை மற்ரும் அழகியலில் முதுகலை, கலை வரலாற்ரில் முனைவர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
"ஆடுனிகா கேரளத்திலே சித்ரகலா "
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
ஓவியத்திற்கான சோவியத் நாட்டின் நேரு விருது, 2007 ல் லலித் கலா அகாடமியிலிருந்து கேரள மாநில அரசு விருது.
Kavitha Balakrishnan

கவிதா பாலகிருட்டிணன் (Kavitha Balakrishnan) (பிறப்பு 1976 சூன் 1) இவர் ஓர் கலை விமர்சகரும், கவிஞரும், [1] சமகால கலை ஆராய்ச்சியாளரும், ஓவியரும் மற்றும் கலைக்காப்பாளாராகவும் உள்ளார். 1998 முதல் 1999 வரை திருவனந்தபுரம், நுண்கலை கல்லூரியில் கலை வரலாற்றின் விரிவுரையாளராக தனது கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் திரிப்பூணித்துராவில் உள்ள ஆர்.எல்.வி இசை மற்றும் நுண்கலைக் கல்லூரியிலும், மும்பையில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வருகை தரும் ஆசிரியராக விரிவுரை செய்கிறார். இவர் தற்போது தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தின் திருச்சூரிலுள்ள நுண்கலைக் கல்லூரி கலை வரலாறு மற்றும் அழகியல் துறையின் விரிவுரையாளராக [2] உள்ளார்.

கல்வி வாழ்க்கை[தொகு]

கவிதா 1998 ஆம் ஆண்டில் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை வரலாறு மற்றும் அழகியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் மலையாள பத்திரிகைகளில் இலக்கியம் சார்ந்த நடைமுறை குறித்த ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்தார். இதற்காக கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில், 2009 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

விருதுகள்[தொகு]

13 வயதில் இவர் ஓவியத்திற்காக சோவியத் நாட்டின் நேரு விருதைப் பெற்றார். இவர் கோடைகாலத்தை கருங்கடலின் கிரிமியன் கடற்கரையில், உக்ரைன் (முன்னாள் சோவியத் ஒன்றியம்) ஆர்டெக்கின் (முகாம்) இடை தேசிய இளம் முன்னோடி முகாமில் கழித்தார்.

2007 ஆம் ஆண்டில் மலையாளத்தில் கலை குறித்த சிறந்த புத்தகத்திற்கான மாநில விருதை [3] லலிதா கலா அகாதமியிலிருந்து கேரளத்திலே சித்ரகலாயுதே வரதனம் என்ற புத்தகம் வென்றது. 2005 ஆம் ஆண்டில் அவருக்கு எஸ்.பி.டி சாகித்ய புரஸ்காரம் மற்றும் 2007 இல் கவிதைக்கான அய்யப்பன் புரஸ்காரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]