கவிகுலகுரு காளிதாசு சமசுகிருத பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிகுலகுரு காளிதாசு சமசுகிருத பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1997 (27 ஆண்டுகளுக்கு முன்னர்) (1997)
வேந்தர்மகராட்டிர ஆளுஞர்
துணை வேந்தர்சிறீனிவாச வர்கேதி
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புஇந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, பல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்kksu.org

கவிகுலகுரு காளிதாசு சமசுகிருத பல்கலைக்கழகம் (Kavikulaguru Kalidas Sanskrit University) என்பது சமசுகிருத மேம்பட்ட கற்றலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் கல்வி நிறுவனம் ஆகும். சமசுகிருதம் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ராம்டெக்கில் உள்ளது.

வரலாறு[தொகு]

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1997க்கு முன்பு எந்தவொரு சமசுகிருத பல்கலைக்கழகம் இல்லை. எனவே நிபுணர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, 18 செப்டம்பர் 1997-ல் கவிகுலகுரு காளிதாசு சமசுகிருத பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. புகழ்பெற்ற கவிஞரும் சமஸ்கிருத பண்டிதருமான காளிதாசு பெயர் இப்பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்டது. காளிதாசனின் கவிதைகள் மற்றும் நாடகங்கள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன. காளிதாசன் ராம்டெக் நகரில் இருந்தபோது கவிதைகளை எழுதியதாக நம்பப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஜிச்கர் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்குக் காரணம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பங்கஜ் சண்டே ஆவார். இவர் 2012 வரை இப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார். ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2017 வரை உமா சி. வைத்யா துணைவேந்தராக இருந்தார். பின்னர் திசம்பர் 2017 முதல் ஸ்ரீனிவாசா வர்கேதி துணைவேந்தராக உள்ளார்.[1]

வளாகம்[தொகு]

நாக்பூர் நகரத்திலிருந்து 50 கி. மீ. தொலைவில் உள்ள ராம்டெக் என்ற இடத்தில் இதன் முதன்மை வளாகத்துடன் பல்கலைக்கழகம் பல வளாகங்களைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் வாரங்காவில் அமைந்துள்ளது. அனைத்து நிர்வாக மற்றும் கல்வித் துறைகளும் ராம்டெக் வளாகத்திலிருந்து செயல்படுகின்றன. வாரங்கா வளாகத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. வாரங்காவில், பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மையத்தை அமைய உள்ளது.

அங்கீகாரமும் தரச்சான்றும்[தொகு]

12பி & 2எப் தகுதியுடன் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் இதுவாகும். தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் பி++ அங்கீகாரம் பெற்றது. மகாராட்டிரா மற்றும் கோவாவின் அதிகார வரம்பில் சிறப்புப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனத்திற்கு இது அங்கீகாரம் அளிக்கிறது. இது சமசுகிருத ஆராய்ச்சியாளர்களுக்கான முக்கிய ஆராய்ச்சி மையமாகும்.

கல்வி[தொகு]

இப்பல்கலைக்கழகம் இளங்கலை (BA), இளங்கலை கல்வி (B.Ed.), முதுகலை (MA), ஆய்வியல் நிறைஞர் (M.Phil.), மற்றும் முனைவர் (Ph. D.) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை நடத்தி பட்டங்களை வழங்குகிறது. பட்டம். இப்பல்கலைக்கழகம் தனித்துவமானது. இது சமசுகிருத மொழிக்கான நவீன அணுகுமுறையில் கவனம் செலுத்தும் புதுமையான கல்வித் திட்டம் மற்றும் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. பாரம்பரிய சமசுகிருதத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பண்டைய இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வினையும் வலியுறுத்துகிறது. பழைய சமசுகிருத நூல்களில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பிரத்தியேகமாக விவரிக்கப்பட்டுள்ளன.

துறைகள்[தொகு]

  1. வேதகல்வித் துறை
  2. சமசுகிருத மொழி & இலக்கியத் துறை
  3. நவீன மொழிகள் துறை
  4. பாரத தரிசனத் துறை
  5. யோக அறிவியல் துறை
  6. கணினி அறிவியல் துறை
  7. வேதாங்க ஜோதிடத் துறை
  8. வாசுது சாத்திரத் துறை
  9. கல்வியியல் துறை
  10. சமூக அறிவியல் துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "About VC". kksanskrituni.digitaluniversity.ac. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.

 

வெளி இணைப்புகள்[தொகு]