கழுவெளி சதுப்பு நிலம்
| கழுவெளி சதுப்பு நிலம் | |
|---|---|
| அமைவிடம் | திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு |
| ஆள்கூறுகள் | 12°10′N 79°55′E / 12.167°N 79.917°E |
| ஏரி வகை | சதுப்புநிலம் |
| வடிநிலப் பரப்பு | 75 சகிமீ |
| வடிநில நாடுகள் | இந்தியா |
கழுவெளி சதுப்பு நிலம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் - வானூர் இடையே கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி, 15 ஆயிரம் ஏக்கரில், 75 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கழுவெளி நன்னீர் சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இதை பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. [1] இந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி 720 ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அமைந்துள்ளன.
அமைவிடம்
[தொகு]கழுவெளி சதுப்பு நிலமானது புதுச்சேரியில் இருந்து அனுமந்தை கிராமம் வழியாக சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து முருக்கேரி, நடுக்குப்பம் வழியாக சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஆக்கிரமிப்புகள்
[தொகு]600 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த கழுவெளி சதுப்பு நிலம், இறால் வளர்ப்பு பண்ணியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [2]