கள்ளப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளப்படம்
இயக்கம்ஜே. வடிவேல்
தயாரிப்புடாக்டர் ஆனந்த் பொன்னிறைவன்
கதைஜே. வடிவேல்
திரைக்கதைஜே. வடிவேல்
இசைகே
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சிறீராமா சந்தோஷ்
படத்தொகுப்புகௌகின்
கலையகம்இறைவன் பிலிம்ஸ்
வெளியீடு20 மார்ச்சு 2015 (2015-03-20)
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கள்ளப்படம் (Kallappadam) தமிழில் வெளியான சுயாதீன பரபரப்பூட்டும் திரைப்படமாகும். டாக்டர் ஆனந்த் பொன்னிறைவன் என்பவரின் தயாரிப்பு நிறுவனமான இறைவன் பிலிம்ஸின் கீழ் ஜே. வடிவேல் எழுதி இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார்.[1] படத்திற்கு ஸ்ரீராமா சந்தோஷ் ஒளிப்பதிவையும், கௌகின் படத்தொகுப்பையும், கே இசையமைப்பையும் மேற்கொண்டனர்.[2] சொந்த நாட்டுப்புறக் கலையான கூத்தை அடிப்படையாகக் கொண்டு முதன்முறையாக திரைப்படம் எடுக்கப்பட்டது.[3] [4] படம் 20 மார்ச் 2015 அன்று வெளியிடப்பட்டது.

வெளியீடு[தொகு]

2015ஆம் ஆண்டில் வெளிவந்த பெர்த் சர்வதேச திரைப்பட விழா, மெல்போர்ன் திரைப்பட விழா ஆகிய இரண்டு ஆத்திரேலிய திரைப்பட விழாக்களில் திரையிட இந்த படம் தேர்வு செய்யப்பட்டது.[5]

இயக்குனர் மிஷ்கின் தனது முன்னாள் உதவியாளரின் முதல் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்தார். பிப்ரவரி 2015இல் படத்தின் உரிமையைப் பெற்றார். இந்த படம் 20 மார்ச் 2015 அன்று மற்ற ஒன்பது தமிழ் படங்களுடன் வெளியானது. [6]

சான்றுகள்[தொகு]

  1. Ramachandran, Mythily (19 March 2015). "Kallappadam a story of survival in the industry". கல்ப் நியூஸ். http://gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/kallappadam-a-story-of-survival-in-the-industry-1.1474742. பார்த்த நாள்: 20 March 2015. 
  2. staff (9 March 2015). "Tracing the Life of Four Young Cinema Technicians". இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/tamil/Tracing-the-Life-of-Four-Young-Cinema-Technicians/2015/03/09/article2704212.ece. பார்த்த நாள்: 20 March 2015. 
  3. staff (17 March 2015). "Native art form Koothu to come alive in Kallappadam". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150319172352/http://www.hindustantimes.com/regional/native-art-form-koothu-to-come-alive-in-kallappadam/article1-1327342.aspx. பார்த்த நாள்: 20 March 2015. 
  4. Indo-Asian News Service (16 March 2015). "'Kallappadam', a tribute to native art form 'Koothu' (With Image)". Webindia இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402130250/http://news.webindia123.com/news/Articles/Entertainment/20150316/2554145.html. பார்த்த நாள்: 20 March 2015. 
  5. Indo-Asian News Service (28 February 2015). "'Kallappadam' selected for two Australian film festivals". Zee News. http://zeenews.india.com/entertainment/movies/kallappadam-selected-for-two-australian-film-festivals_1554078.html. பார்த்த நாள்: 20 March 2015. 
  6. "Friday Fury - March 20". Archived from the original on 2015-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளப்படம்&oldid=3805446" இலிருந்து மீள்விக்கப்பட்டது