களப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களப் பள்ளி (field school) என்பது ஒரு குறுகிய காலக் கல்வித் திட்டமாகும். இது கல்விக் காலத்திலான களப் பயண ஆய்வினை உள்ளடக்கியதாகும்.[1][2] தனது ஆரம்பக் கல்வியில் பயின்றதை செய்து பார்ப்பதன் மூலம் கற்றுக் கொள்கின்றனர். செய்து கற்றலை இது அடிப்படையாகக் கொண்டது.[3]

வடிவம்[தொகு]

களப் பள்ளிகள் பொதுவாக கல்வி ஊழியர்களால் நடத்தப்படுகின்றன, சில சமயங்களில் களப் பயணங்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.[4] ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்யும் அளவிற்கு கடினமானதாக இருக்கும்.ஆய்வு நடத்தும் செயல்முறை மூலம் கற்றலில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

களப் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் பொதுவாக மிகக் குறைவாகவே தீர்மானிக்கப்படுகிறது. இது அரிதாக 1:20 எனும் எண்னிக்கையினை மீறுகிறது மற்றும் பல கல்வி நிறுவனங்களில் இது 1:6 எனத் தீர்மானிக்கப்படுகிறது. இங்கு விரிவுரைகள் மாலை நேரங்களில் வழங்கப்படுகிறது.

சில பிரிவுகளுக்கு/ துறைகளுக்கு இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டம் பெறுவதற்கான நிபந்தனையாக களப் பள்ளி பங்கேற்புத் தேவைப்படுகிறது. தொல்லியல், புவியியல் மற்றும் தொல்லுயிரியல் ஆகியவை உதாரணங்களாகும், இருப்பினும் குறிப்பிட்ட தேவைகள் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன.

  1. தொல்லியல்
  2. புவியியல்
  3. தொல்லுயிரியல்
  4. சுற்றுச்சூழல் கல்வி
  5. முதனியியல்
  6. கடல்சார் உயிரியல்
  7. மானுடவியல்
  8. நிலவியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Northern Ireland Field School Jacob R. Hickman, Brigham Young University
  2. field school, Archaeologywordsmith.com
  3. Northern Ireland Field School Jacob R. Hickman, Brigham Young University
  4. Fieldwork, Bryn Mawr College
"https://ta.wikipedia.org/w/index.php?title=களப்_பள்ளி&oldid=3898541" இலிருந்து மீள்விக்கப்பட்டது