களத்தடுப்பு (துடுப்பாட்டம்)
களத்தடுப்பு என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாளர் அடித்த பந்தைத் தடுக்கும் செயலாகும். இதன்மூலம் ஒரு மட்டையாளர் எடுக்கும் ஓட்டங்களைக் குறைக்கவும் பிடிபடுதல் மற்றும் ஓட்ட இழப்பு ஆகிய முறைகளில் அவரை வீழ்த்தவும் எதிரணி வீரர்கள் முயற்சிப்பர். களத்தடுப்பு நிலைகளை எதிர்ப்பக்கம் (off side) மற்றும் நேர்ப்பக்கம் (leg side) என்று இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். களத்தடுப்பு குறித்து துடுப்பாட்ட விதி 28இல் வரையறுக்கப்பட்டுள்ளது.[1]
களத்தடுப்பு நிலைகளின் பெயர்களும் அமைவிடங்களும்
[தொகு]ஒரு அணியில் உள்ள 11 வீரர்களில் ஒருவர் இழப்புக் கவனிப்பாளராகவும் மற்றொருவர் பந்துவீச்சாளராகவும் இருப்பதால் களத்தடுப்பில் மொத்தம் 9 வீரர்கள் மட்டுமே ஈடுபட முடியும். ஒரு அணியின் வீரர்கள் எந்தெந்தக் களத்தடுப்பு நிலைகளில் நிற்க வேண்டும் என்பதை அதன் தலைவர் தீர்மானிப்பார். இதை பந்துவீசப்படும் நேரத்தைத் தவிர மற்ற எந்த நேரத்திலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
வீசுகளத்தில் நிற்கும் மட்டையாடுபவருக்கு முன்னால் (நேராக) உள்ள களப்பகுதி நேர்ப்பக்கம் என்றும் பின்னால் (எதிராக) உள்ள களப்பகுதி எதிர்ப்பக்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "{% DocumentName %} Law | MCC". www.lords.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.