உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விப் பொதுத் தராதரம் (உயர் தரம்) அல்லது க.பொ.த (உ/த) இலங்கையிலுள்ள கல்விப் பொதுத் தராதர தகமையாகும். இது பரீட்சைகள் திணைக்களத்தினாலும் கல்வி அமைச்சினாலும் நடாத்ததப்படுகிறது.[1] இது பிரித்தானிய சாதாரண உயர் படிநிலையின் அடிப்படையில் அமைந்தது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தேறிய மாணவர்கள் கட்டாயமற்ற இரண்டு வருடங்களின் பின்பு (தரம் 11 மற்றும் 12 அல்லது பாடசாலை மூலமற்ற விண்ணப்பதாரிகள்) இப்பரீட்சையினை எழுத முடியும். அனேகமானவர்கள் குறிப்பிட்ட பாடசாலைகள் மூலம் பரீட்சைக்கு விண்ணப்பிக்க, பாடசாலைக் கல்வியை விட்டவர்கள் தனியாக விண்ணப்பிக்க முடியும். இத்தகைமை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிப் பரீட்சையாகவும் பயன்படுகின்றது. பரீட்சைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படுகின்றது.

கற்கைகள்

[தொகு]

பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்குத் தேற்ற 2 ஆண்டுகள் பாடசாலையில் படித்திருக்க வேண்டும். பரீட்சைகள் ஐந்து முதன்மை கற்கை நெறிகளில் நடைபெறும்.

  1. பெளதீக விஞ்ஞானம் - இணைந்த கணிதம், பெளதீகம் மற்றும் வேதியியல்
  2. உயிரியல் விஞ்ஞானம் - உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) இணைந்த பெளதீகம் மற்றும் வேதியியல்
  3. வர்த்தகம் மற்றும் கணக்கியல் இதனுடன் கீழே காணப்படும் ஏதேனும் ஒரு பாடத்தை தெரிவுசெய்ய வேண்டும். 1. வியாபார புள்ளிவிபரவியல். 2. புவியியல் 3.அரசியல் 4.வரலாறு (இலங்கை வரலாறுடன் இந்திய வரலாறு அல்லது ஐராேப்பா வரலாறு அல்லது உலக வரலாறு) 5.லாஜிக் விஞ்ஞான முறை 6.ஆங்கிலம் 7.ஜேர்மன் 8. பிரஞ்சு 9.விவசாயம் 10.இணைந்த கணிதம் 11.I.C.T
  4. கலை
  5. தொழினுட்பம்

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]