உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விக் கொள்கையானது (Education policy) கல்வித் துறையில் செல்வாக்கு செலுத்தும் கொள்கைகள் மற்றும் கொள்கை முடிவுகள், கல்வி அமைப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் விதிகளின் சேகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். [1] உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையே பல்வேறு நிலைகளில் கல்வி மேலாண்மை பகிரப்படலாம். சில ஆய்வாளர்கள் கல்விக் கொள்கையை சமூகப் பொறியியலின் அடிப்படையில் பார்க்கின்றனர். [2]

கல்வி, பல நிறுவனங்களின் மூலம் பல நோக்கங்களுக்காக பல வடிவங்களில் நடைபெறுகிறது. இத்தகைய கல்வி நிறுவனங்களின் எடுத்துக்காட்டுகளில் குழந்தை பருவ கல்வி மையங்கள், மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், இரண்டு மற்றும் நான்கு ஆண்டு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள், பட்டதாரி மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்கள், வயது வந்தோருக்கான கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை-பயிற்சி திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்களின் கல்வி இலக்குகள் கல்விக் கொள்கையை பாதிக்கின்றன. [3] மேலும், இந்தக் கல்விக் கொள்கைகள் எல்லா வயதினரும் ஈடுபடும் கல்விyil தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பள்ளிகளின் அளவு, வகுப்பின் அளவு, பள்ளித் தேர்வு, பள்ளி தனியார்மயமாக்கல், பள்ளிகளில் காவல்துறை, கண்காணிப்பு, ஆசிரியர் தேர்வு, கல்வி மற்றும் சான்றிதழ், ஆசிரியர் ஊதியம், கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம் ஆகியவை கல்விக் கொள்கையில் விவாதத்திற்கு உட்பட்ட பகுதிகளின் எடுத்துக்காட்டுகளாகும்.

சான்றுகள்

[தொகு]
  1. "Education Policy" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-07.
  2. Wilson, Harold E. Social Engineering in Singapore: Educational Policies and Social Change, 1819-1972. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
  3. Roumell, Elizabeth Anne; Salajan, Florin D.; Todoran, Corina (July 2020). "A Survey of U.S. Education Policy Regarding the Education of Adults" (in en). Educational Policy 34 (5): 785–815. doi:10.1177/0895904818802416. பன்னாட்டுத் தர தொடர் எண்:0895-9048. http://journals.sagepub.com/doi/10.1177/0895904818802416. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்விக்_கொள்கை&oldid=3824391" இலிருந்து மீள்விக்கப்பட்டது