உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விக்கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விக் கோட்பாடு (Education theory) [1] அல்லது கல்வி ஆய்வுகள், கல்வி அறிவியல் அல்லது மரபாக கல்வியியல்,[2] என்பது கல்விக் கொள்கையையும் நடைமுறையையும் கண்டறிந்து விவரித்து புரிந்துகொள்ளவும் பரிந்துரைக்கவும் உதவும் அறிவியல்முறைக் கோட்பாடாகும். கல்விக் கோட்பாடு மழலையர்கல்வி, முதிரகவையர் கல்வி, பாடத்திட்டம், கற்றல் கோட்பாடு, கல்விக் கொள்கை, நிறுவனக் கோட்பாடு, தலைமைதாங்கல் எனப் பல தலைப்புகளை உள்ளடக்கியதாகும். கல்விச் சிந்தனை வரலாறு, தத்துவம், சமூகவியல், உளவியல் போன்ற பல துறைகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது.

கல்வியின் பண்பாட்டுக் கோட்பாடு, கல்வி, சிறைச்சாலைகள், குடும்பங்கள், சமய நிறுவனங்கள், கல்வியகங்கள் உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் முழுவதிலும் எவ்வாறு கல்வி நிகழ்கிறது என்பதைக் கருதுகிறது.[3][4] பிற கோட்பாடுகளாக, கல்வி உளவியல், கல்விச் சமூகவியலில் இருந்து வரும் கல்வி நடத்தையியல் கோட்பாடும் கல்விச் சமூகவியலில் உருவாகிய செயல்பாட்டுவாதக் கோட்பாடும் அமைகின்றன.[5]

ஐரோப்பாவில் கல்வியைப் புரிந்து கொள்வதற்கான தொடக்க கால முயற்சிகள் பண்டைக் கிரேக்க தத்துவவாதிகளாலும் சோபிஸ்டுகளாலும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனால் அரபு, இந்திய மற்றும் சீன அறிஞர்களிடையே கல்வி ப்ற்றிய சமகால (அல்லது முந்திய) விவாதங்கள் நடைபெற்று உள்ளன.

கல்விச் சிந்தனைகள்

[தொகு]

கல்வி சிந்தனை என்பது கோட்பாடுகளைத் தீர்மானிப்பதோ வகுப்பதோ அல்ல; இது "பல்வேறு துறைகளின் கண்ணோட்டத்தில் இருந்து கல்வி நடப்புகளையும் சிக்கல்களையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் வழிமுறையாகும்."[6]

கல்வி நெறிமுறைக் கோட்பாடுகள்

[தொகு]

கல்வி நெறிமுறைக் கோட்பாடுகள்

[தொகு]

கல்வி நெறிமுறை கோட்பாடுகள் கல்வியின் நெறிகள், இலக்குகள் செந்தரங்களை வழங்குகின்றன..[7]

கல்வித் தத்துவங்கள்

[தொகு]

கல்வித் தத்துவங்கள் அல்லது கோட்பாடுகள் இதுவரை மனிதகுலங்களின் மெய்யியல், கற்றல் உளவியலின் உண்மையான ஆய்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், ஆனால் எந்தவொரு பொருண்மையிலும் அவர்கள் கல்வி என்னவென்பதைப் பற்றிய கருத்துக்களை வலியுறுத்தி, ஏன் அவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும், எவ்விதத்தில் அதைப் பயிற்றுவித்தல் வேண்டும், என்னென்ன வடிவங்களில் கற்பிக்க வேண்டும் என முழுமையான மெய்யியல் தத்துவவியல் கோட்பாட்டு விவரிப்பில் உள்ள வகைகளின் பகுப்பாய்வு தவிர, 1. நல்லது அல்லது சரியானது பற்றிய அடிப்படைவரன்முறைகள் 2. மனித வாழ்க்கை, உலகம் பற்றிய அடிப்படை உண்மைகள் 3. இந்த இரண்டு வகை வரன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுத்து, கல்வி நோக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். 4. கற்றுக்கொள்வதற்கான உளவியல் மற்றும் போதனை வழிமுறைகள் சார்ந்த அடிப்படை உண்மை விவரங்கள் 5. கல்வி பயன்படுத்த வேண்டும் வழிமுறைகள் பற்றிய பொருண்மைகளைப் பற்றி மேலும் முடிவுகளை எடுத்தல்."[8]போன்றவர்றையும் கருதிப் பார்க்கவேண்டும்


பள்ளிகளின் நோக்கங்களாக,[9] தொடர்ந்து நிலவும் கேள்விகளுக்குப் பகுத்தறிவுவழி தீர்வு காணல், அறிவியல் ஆய்வு முறைகளை ஆழ்ந்து கற்றல், அறிதிறன்களை வளர்த்தெடுத்தல், மாற்று வழிமுறைகளை உருவாக்குதல், ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பது, ஒரு மக்கள்தலைமைச் சமூகத்தை கட்டியமைத்தல் ஆகியவை அமைதல் வேண்டும்.[10]

பொதுவான கல்வித் தத்துவம் கல்வித் தேசியம், கல்வி முன்னேற்றம், கல்வியின் இன்றியமையாமை , உய்வுநிலைக் கல்வி, மான்டேசொரி கல்வி, வால்டோர்ஃப் கல்வி, மக்கள்நலக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கவேண்டும்.

குறிப்புகள்

[தொகு]
  1. Very rarely, except by non-native speakers, educational sciences. Examples: the Journal of Applied Technical and Educational Sciences; international conferences: World Conference on Educational Sciences; International Conference on Educational Sciences, Technology Integration and Mobile Learning; University of Wisconsin Educational Sciences Building, Indiana State University Department of Applied Clinical and Educational Sciences
  2. வார்ப்புரு:Multiref2
  3. Philip H. Phenix (January 1963). "Educational Theory and Inspiration". Educational Theory 13 (1): 1–64. doi:10.1111/j.1741-5446.1963.tb00101.x. https://archive.org/details/sim_educational-theory_1963-01_13_1/page/1. 
  4. Gearing, Frederick(1975). "A Cultural Theory of Education". {{{booktitle}}}, 1–9, American Anthropological Association.
  5. Webb, DL, A Metha, and KF Jordan (2010). Foundations of American Education, 6th Ed. Upper Saddle River, NJ: Merill, pp. 77-80,192-193.
  6. "Journal of Thought". பார்க்கப்பட்ட நாள் 19 November 2010.
  7. Dolhenty, Jonathan. "Philosophy of Education and Wittgenstein's Concept of Language-Games". The Radical Academy. பார்க்கப்பட்ட நாள் 19 November 2010.
  8. Frankena, William K.; Raybeck, Nathan; Burbules, Nicholas (2002), "Philosophy of Education", in Guthrie, James W. (ed.), Encyclopedia of Education, 2nd edition, New York, NY: Macmillan Reference, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865594-X
  9. Webb, DL, A Metha, and KF Jordan (2010). Foundations of American Education, 6th Ed. Upper Saddle River, NJ: Merill, pp. 55-91
  10. Barry, W. (2012). Is Modern American Public Education Promoting a Sane Society, in "International Journal of Science" 2nd Ed. ISSN 2225-7063, pp. 69-81, http://issuu.com/ijosc.net/docs/ijosc?mode=window&viewMode=doublePage

நூல்தொகை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்விக்கோட்பாடு&oldid=3794323" இலிருந்து மீள்விக்கப்பட்டது