கல்லூரிச் சுற்றுப்பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லூரிச் சுற்றுப்பயணம் அல்லது வளாகச் சுற்றுப்பயணம் (College tour) என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழக வளாகத்தினைச் சுற்றிப் பார்ப்பதனைக் குறிக்கிறது. மாணவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற பார்வையாளர்கள் தான் சேர இருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் வசதிகள், அத்துடன் மாணவர் வாழ்க்கை, வளாகக் கலாச்சாரம், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனம் வழங்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய மேற்கொள்ளும் பயணத்தினைக் குறிக்கிறது. இந்தச் சுற்றுப்பயணங்களின் போது மாணவர்கள் கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் உணர்வைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். கல்லூரிச் சுற்றுப்பயணங்கள் வாயிலாக தனித்தனியாக அல்லது பள்ளிக் குழுக்கள் மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் பல மாணவர்கள் குறுகிய காலத்தில் பல பள்ளி/கல்லூரிகளுக்குச் செல்லலாம். கூடுதலாக, பல கல்லூரிகள் இப்போது இணையத்தில் மெய்நிகர் சுற்றுப்பயண வசதிகளை வழங்குகின்றன.

1976 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வளாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வளாகப் பார்வையானது ஒரு சேர்க்கை அதிகாரியால் வழிநடத்தப்படும். அந்தச் சமயத்தின் போது மாணவர் தலைவர் அங்குள்ள பிரிவுகள் குறித்து விளக்கலாம்.[1] ஓப்பன் ஹவுசஸ் எனும் நிகழ்வினை பரவலகாக கல்லூரிகள் ஏற்படுத்துகின்றன. அந்தச் சமயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது விளக்கக்காட்சிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்படும். மற்ற நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது.[2][3] பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பெரிய கல்வி நிறுவன மாணவர்களுக்கான கல்லூரிச் சுற்றுப் பயணங்களை ஏற்பாடு செய்கின்றன.[4][5]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் எனும் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுப் பயண நிகழ்வை நடத்துகிறது.[6]

மாதிரி வளாக வருகை[தொகு]

நேரம் செயல்பாடுகள்
காலை 9:00 - 9:15 மணி வளாகத்திற்கு வருகை புரிதல்
காலை 9:15 - 10:00 மணி வரவேற்பு மற்றும் வளாக அறிமுகம்

தகவல் அமர்வு
கேள்வி பதில் அமர்வு
காலை 10:00 - 11:00 மணி
நூலகம்

வகுப்பறை கட்டிடங்கள் / விரிவுரை அரங்குகள்

உடற்பயிற்சிக் கூடம்/ மைதானம் / அரங்கம்

மாணவர் சங்கம் / சிற்றுண்டிச்சாலை / புத்தகக் கடை
11:00 - 12:00 மணி வளாகத்தின் தனிப்பட்ட ஆய்வு:

மாணவர்களுடன் உரையாடுதல்
தங்குமிடத்தைப் பார்வையிடுதல்

நூல் வாங்குதல் பேராசிரியர்கள் / பயிற்சியாளர்கள் / பணியமர்த்துபவர்களுடன் உரையாடல்' சிற்றுண்டிச்சாலையில் உணவருந்துதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Spencer, Janet, and Sandra Maleson; “The Ten Step Plan for Successful College Visits” Introduction; Visiting College Campuses 7th ed.; Random House; New York, NY; 2004; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-76400-3, page xvii
  2. "Annual University Open House". University Open House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
  3. “Western Carolina University – Open House” பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம், Western Carolina University Retrieved on 10-28-2009
  4. “Campus Visit Options” பரணிடப்பட்டது 2009-09-27 at the வந்தவழி இயந்திரம், Texas A&M University. Retrieved on 10-28-2009
  5. “Large Group visits, Visiting Freshmen” பரணிடப்பட்டது 2009-07-03 at the வந்தவழி இயந்திரம், Northwestern University, Retrieved on 10-28-2009
  6. Service, Express News (2023-02-15). "TN Government class 12 students to get exposure visits to colleges". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.