உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லூரிக் கல்வித் திறன் சோதனைத் தேர்வு (தென் கொரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லூரிக் கல்வித் திறன் சோதனை (College Scholastic Ability Test or CSAT) தென் கொரியா நாட்டில் பள்ளிக் கல்வியில் இறுதி படிப்பில் தேர்வான மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான திறனறிதல் தேர்வாகும்.[1][2]இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் வியாழக்கிழமை அன்று நடத்தப்படும். [3]இத்தேர்வு ஐந்து பாடங்களில், எட்டு மணி நேரம் தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்தேர்வுக்கு இடையிலும் 20 நிமிடங்கள் இடைவேளை உண்டு. இத்தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கப்படுகிறது

தகுதித் தேர்வு அட்டவணை

[தொகு]

கணிதப் பிரிவில் உள்ள 9 வினாக்களைத் தவிர, அனைத்து வினாக்களுக்கு பல விருப்பங்கள் உள்ளது, அவை குறுகிய பதில்களைக் கொண்டது. [4]

வ எண் பாடம் நேரம் கேள்விகளின்
எண்ணிக்கைகள்
புள்ளிகள் குறிப்பு
தேர்வாளர்கள் காலை 8.10 மணியளவில் தேர்வுக் கூடங்களில் இருக்க வேண்டும்.
1 தேசிய மொழி (கொரிய மொழி) 08:40–10:00 (80 நிமிடங்கள்) 45 100 கேள்வி எண் 1–17:படித்தல்
கே எண் 18–34: இலக்கியம்
கே எண் 35–45: விருப்பமானவை (தேர்வாளர்கள் பேச்சு மற்றும் எழுத்து அல்லது மொழி மற்றும் ஊடகம் ஆகியவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டும்)

(ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்)

இடைவேளை: 10:00–10:20 (20 நிமிடங்கள்)
2 கணக்கியல் 10:30–12:10 (100 நிமிடங்கள்) 30 100 கே எண் 1–22: கணக்கியல் I, கணக்கியல் II
கே எண் 23–30: விருப்பமானவை (தேர்வாளர்கள் நுண்கணிதம், வடிவவியல் அல்லது நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய வேண்டும்)
  • 30% (ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 அல்லது 4 புள்ளிகள்)
மதிய உணவு நேரம்: 12:10–13:00 (50 நிமிடங்கள்)
3 ஆங்கில மொழி 13:10–14:20 (70 நிமிடங்கள்) 45 100 கேள்வி எண் 1–17: கேட்டல் (25 நிமிடங்கள்)
கேள்வி எண் 18–45: படித்தல்

(ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்)

இடைவேளை: 14:20–14:40 (20 நிமிடங்கள்)
4 கொரிய வரலாறு 14:50–15:20 (30 நிமிடங்கள்) 20 50 கட்டாயப் பாடம்

(ஒரு கேள்விக்கு 2 or 3 புள்ளிகள்)

கொரிய வரலாற்று கேள்வி மற்றும் பதில் தாள்களை சேகரித்தல்
முதல் துணை பாடத் தாள்களை வழங்குதல்
15:20–15:35 (15 நிமிடங்கள்) துணைப் பாடம் (கள்) எடுக்காத தேர்வாளர்கள் காத்திருப்பு அறைக்குச் செல்லவேண்டும்)
முதல் துணைப் பாடம் 15:35–16:05 (30 நிமிடங்கள்) 20 50 விண்ணப்பதாரர்கள் சமூக அறிவியல், அறிவியல் அல்லது தொழிற்கல்வி ஆகியவற்றிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்வு செய்யலாம்
  • ஒவ்வொரு பாடத்தின் கேள்வி-பதில் தாள்களை சேகருக்கும் நேரம் 2 நிமிடங்கள்

(ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்)

ஒவ்வொரு பாடத்தின் கேள்வி-பதில் தாள்களை சேகருக்கும் நேரம் 2 நிமிடங்கள் 16:05–16:07 (2 நிமிடங்கள்)
இரண்டாவது துணைப்பாடம் 16:07–16:37 (30 நிமிடங்கள்) 20 50
இடைவேளை: 16:37–16:55 (18 நிமிடங்கள்)
5 இரண்டாவது வெளிநாட்டு மொழிகள்: சீன மொழி, ஜெர்மானியம், எசுப்பானியம், ஜப்பானியம், உருசியம், அரபு மொழி 17:05–17:45 (40 நிமிடங்கள்) 30 50 கேட்டல் சோதனை இல்லை

(ஒரு கேள்விக்கு 1 அல்லது 2 புள்ளிகள்)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Research Institute". NRCS. Archived from the original on அக்டோபர் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2013.
  2. "The One-shot Society". The Economist Limited Newspaper 2013. December 17, 2011 இம் மூலத்தில் இருந்து December 5, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131205081530/http://www.economist.com/node/21541713. 
  3. S. Korean students take annual college entrance exam on 14th November 2024
  4. "KICE's homepage introducing CSAT". www.suneung.re.kr. Archived from the original on July 16, 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.

வெளி இணைப்புகள்

[தொகு]