கல்யாணி ராய்
Appearance
கல்யாணி ராய் (Kalyani Roy)(பிறப்பு 14 சனவரி 1967) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் திரிபுரா சட்டமன்றத்தின் தற்போதைய அரசாங்க தலைமை கொறடாவாகவும், மார்ச், 2018 முதல் தெலியாமுரா சட்டமன்றத்தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார். திரிபுரா மாநிலத்தில் அரசு தலைமைக் கொறடாப் பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான்.[1]