கலிப் அருங்காட்சியகம், புது தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிப் அருங்காட்சியகம்
Building of Ghalib Academy, New Delhi
கலிப் அருங்காட்சியகத்தில் மிர்சா கலிப்பின் ஓவியம்
Map
நிறுவப்பட்டதுபெப்ரவரி 22, 1969 (1969-02-22)
அமைவிடம்நிஜாமுதின் (மேற்கு)
ஆள்கூற்று28°35′29″N 77°14′36″E / 28.591460°N 77.243253°E / 28.591460; 77.243253
வகைநினைவகம்
முக்கிய வைப்புகள்முகலாய காலத்து நாணயங்கள், கையால் எழுதப்பட்ட கவிதைகள்/கலிப்பின் கடிதங்கள்
சேகரிப்புகள்ஓவியங்கள், கையெழுத்து, கையால் எழுதப்பட்ட மாதிரிகள்
உரிமையாளர்கலிப் அகாதமி, புது தில்லி
பொது போக்குவரத்து அணுகல்ஜவகர்லால் நேரு விளையாட்டரங்க மெட்ரோ
வலைத்தளம்www.ghalibacademy.org

மிர்சா கலிப் அருங்காட்சியகம் (Ghalib Museum, New Delhi) என்பது புது தில்லியில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் உருது கவிஞர் மிர்சா கலிப்பின் வாழ்க்கை மற்றும் காலங்கள் பற்றிய ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] புது தில்லியின் கலிப் அகாதமியின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் 13ஆம் நூற்றாண்டின் சூபி துறவி குவாஜா நிஜாமுதீனின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் கலிப் அகாதமி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. 22 பிப்ரவரி 1969 அன்று கலிப் நூற்றாண்டு விழாவில் இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் கலிப் வசித்த இடங்கள், உணவுப் பழக்கம் மற்றும் கவிஞரின் உடைகள் மற்றும் அவரது காலங்களின் படங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் முகலாய காலத்தைச் சேர்ந்த முத்திரைகள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் கையெழுத்து மாதிரிகள் உள்ளன. ம. பி. உசைன், சதீஷ் குஜ்ரால், அனிசு பரூக்கி போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள் அருங்காட்சியகத்தின் முக்கிய ஈர்ப்புகளில் சில. கலிப்பின் கவிதை எழுத்துக்கள் மற்றும் கலிப்பின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட பிற கலைப் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2][3]

மிர்சா கலிபின் கல்லறை அகாதமி கட்டிடத்திற்கு அருகில் உள்ளது. இது நிஜாமுதீன் தர்காவிற்குச் செல்லும் வழியில் கட்டிடத்தின் இணைக்கப்பட்ட முற்றத்தில் அமைந்துள்ளது. உமாயூனின் கல்லறை அருங்காட்சியகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

படங்கள்[தொகு]

கலைப்பொருட்கள்[தொகு]

  • கையெழுத்து பிரதிகள்
  • கடிதங்கள்
  • அஞ்சல் முத்திரைகள்
  • நாணயங்கள்
  • அஞ்சல் தலைகள்

கலிப்பை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் மட்டுமின்றி பாக்கித்தானிலும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History". Archived from the original on 27 May 2015. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  2. "Ghalib Academy". பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  3. "BRIEF REVIEW OF GHALIB ACADEMY, NEW DELHI". பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.