உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கல்மேட்டுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் மேலமடை கிராமத்தில் ஒரு சிற்றூராக கலிங்கல்மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. தமிழ் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி இக்கிராமத்தில் பிறந்தவராவார். [1]

பெயர்க் காரணம்

[தொகு]

மழைக் காலங்களில் இவ்வூரில் உள்ள ஏரியின் மதகு வழியே நீரானது கரைபுரண்டு ஓடியதால் இப்பெயர் பெற்றது. [2]

எல்லை

[தொகு]

ஊரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் பெரிய ஏரிகளைக்கொண்டு காணப்படுகிறது. வடக்கே பாப்பாகுடி என்ற சிற்றூரும் தெற்கே இருக்கண்குடி மற்றும் நென்மேனியை தனது எல்லையாகக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

600 ஆண்களும், 623 பெண்களும், 277 சிறுவர் சிறுமியர்களும் வசித்து வருகின்றனர்.

இயற்கைவளம் மற்றும் தொழில்

[தொகு]

இங்கு விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இரு ஏரிகளில் தேங்கும் நீரினால் சுமார் 1700 எக்டர்(ஹெக்டேர்) நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. இங்குள்ள ஏரியில் ஏழு மதகுகளின் மூலம் இவ்விளை நிலங்களுக்கு நீரானது வழிந்தோடி விளைநிலங்களை செழிப்புறச்செய்கிறது. பெரும்பாலான நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தோட்டங்களில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1961 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 2012 முதல் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு அதுவும் சிறப்பாக நடந்து வருகிறது. இப்பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் சாதி மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பான்மையாக சமையல் தொழிலுக்கும், கட்டிட வேலைக்கும் செல்கின்றனர்.

கல்வியறிவு

[தொகு]

இவ்வூர் மக்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவ்வூரில் பலர் ஆசிரியக்கல்வி பயின்று, அதில் சுமார் 10 க்கும் மேற்பட்டவர்கள் அரசு ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். தற்போது 5 க்கும் மேற்பட்டோர் பிற அரசு பணியிலும் உள்ளனர்.

கோயில்கள்

[தொகு]

இங்கு பழமை வாய்ந்த கலிங்கடிகாத்த கருப்பசாமி கோவில், விநாயகர் கோவில், மந்தையம்மன் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Danushkodi Ramasamy dead, தி இந்து, நாள்: நவம்பர் 26, 2005
  2. இது செவிவழிச்செய்தியாக அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கல்மேட்டுப்பட்டி&oldid=2363007" இலிருந்து மீள்விக்கப்பட்டது