கலாவதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாவதி தேவி
2020 மார்ச் 8 அன்று கலாவதி தேவி
பிறப்பு1965 (அகவை 57–58)கள்
சீதாபுர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமேசன்
அறியப்படுவது4,000 கழிவறைகளைக் கட்டியது
வாழ்க்கைத்
துணை
ஜெயராஜ் சிங்
பிள்ளைகள்இரண்டு மகள்கள்

கலாவதி தேவி (Kalavati Devi) (1965கள்) கழிவறைக் கட்டியதற்காக விருது பெற்ற இந்திய மேசன் ஆவார். இவர் கான்பூர் நகரைச் சேர்ந்தவர். 50 இருக்கைகள் கொண்ட கழிப்பறையை நிறுவுவதன் மூலம் இவர் தனது சொந்த சமூகத்தை மாற்றினார். பின்னர் மற்ற சமூகங்களுக்கிடையேயும் இதைக் கொண்டுச் சென்றார். 4,000 கழிப்பறைகளை உருவாக்க இவர் உதவியுள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக நிறைய பணி செய்கிறார். 2019 ஆம் ஆண்டில் இவருக்கு நாரி சக்தி விருது (இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருது) வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

கலாவதி தேவி 1960களில் பிறந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நகரமான சீதாபூரைச் சேர்ந்தவர். [1] 14 வயதான இவர், 18 வயதாக இருந்த ஜெயராஜ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு கான்பூருக்கு வந்தார். இவரது கணவர், ஷ்ராமிக் பாரதி என்ற இலாப நோக்கற்ற குழுவில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் கான்பூரில் வசித்து வந்தனர். அங்கு பெரும்பாலானவர்கள், தெருவில் மலம் கழிப்பதைக் கண்ட இவர் வெறுப்படைந்தார். இது ஒரு "வாழும் நரகம்" என்றும், தனது பகுதியின் தூய்மையை மேம்படுத்த தான் விரும்பியதாகவும் கூறினார். [2] இந்தப் பணிக்கு இவரது கணவர் ஆதரவாக இருந்தார். இவர் தனது பகுதியில் கழிப்பறைகள் கட்ட முடிவு செய்து, தனது கண்வருடன் ஷ்ராமிக் பாரதி நிறுவனத்தைச் சந்திக்கச் சென்றார். 10-20 கழிவறை வசதியைக் கட்டும் யோசனையில் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். உள்ளூர் நிறுவனங்களை அணுகி, இவர் ரூபாய் 100,000 திரட்ட முடியுமானால் 200,000 ரூபாயை அவர்களின் பங்காக வழங்க முன்வந்தனர். இவர் அதற்காக முயற்சித்து ஒரு நல்ல தொகையை திரட்டினார். இறுதியில் 50 கழிவறைக்கான தொகை இருந்தது. [1]

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருதினை வழங்கினார்

இவர் இத்திட்டத்தில் தனது பங்ககும் இருக்க வேண்டும் என விரும்பினார். என்வே, நிதி திரட்டல் மற்றும் ஒழுங்கமைப்பதை விட இப்பணியில் அதிகமாக தான் ஒரு பணியை செய்ய விரும்பி, தான் ஒரு மேசனாக மாற முடிவு செய்தார். மேலும் ஷ்ராமிக் பாரதி இவரது மேசன் பயிற்சிக்கு உதவியது. [1]

இவரது வீட்டில் வருமானம் ஈட்டும் கணவரும் மருமகன்கள் இருவரும் இறந்து போயினர். [2] இவர் 2015 ஆம் ஆண்டில், 700 குடும்பங்கள் கொண்ட ராக்கி மண்டி என்ற குடிசைகள் சூழ்ந்த நகரத்தில் கழிப்பறை வசதிகள் ஏதுமில்லாமல் வசித்து வந்தார். இவர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார். மேலும், சில கழிப்பறைகளுக்கு நிதியளிக்க "வாட்டர் எய்ட்" என்ற நிறுவ்னத்தை வற்புறுத்தினார். உள்ளூர் சமூகம் நிலம் அல்லது நிதி கொடுக்க விரும்பவில்லை. [3] திறந்தவெளி சாக்கடைகளிலும், தெருவிலும் மலம் கழிக்க வேண்டியிருந்தது. மேலும், தாக்குதல்களும் ஒரு பாலியல் பயமும் இருந்தது. [1]இரண்டு பேருந்துகளில் பயணம் செய்து 5 கி.மீ தூரத்தில் (சில சமயம் மழை பெய்யும் நாட்கள்) நடந்து கழிப்பறைகளை கட்ட இவர் வெளியே சென்றார் .

2020 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தில் நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி முன்வரிசையில் கலாவதி தேவி.

2020 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று இவர் இந்தியப் பிரதமரின் டுவிட்டர் கணக்கில் இவர் இடம் பெற்றார். அன்றைய தினம் இவரது பெயரில் "அற்புதமான ஏழு" என்று பிரதமர் டுவிட் செய்த ஏழு பேர்களில் இவரும் ஒருவர். [2] குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருது விருதை வழங்கியபோது இவரது பணி அங்கீகரிக்கப்பட்டது. புது தில்லியில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்பட்டன. [2]

இவரைப் போலவே கழிவறைக் கட்டும் பணிகாக சார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா தேவி என்பவர் ஒரு வருடம் முன்பு இதே விருதினை பெற்றார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாவதி_தேவி&oldid=3400273" இருந்து மீள்விக்கப்பட்டது