உள்ளடக்கத்துக்குச் செல்

கலாமண்டலம் பிந்துலேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் பித்துலேகா
பிறப்பு18 October 1978 (1978-10-18) (வயது 45)
பணி
சுவா் ஓவியம், நடனக்கலைஞா்
செயற்பாட்டுக்
காலம்
2001-நளைது தேதி வரை
வாழ்க்கைத்
துணை
மாதவ் ராமதாசன்

கலாமண்டலம் பிந்துலேகா இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுவர் சித்திர ஓவியர், மோகினியாட்டம், பரதநாட்டிய நடனக்கலைஞர் ஆவார். [1] இவா் கேரள மாநிலத்தின் முதல் பெண் கோயில் சுவரோவியக் கலைஞர் ஆவார். [2]

ஆரம்பகால வாழ்க்கையும், பின்னணியும்[தொகு]

1878 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி கேரளாவில் பிறந்த கலாமண்டலம் பிந்துலேகா மோகினியாட்டம், மற்றும் பரதநாட்டியத்தில் பட்டயச் சான்றிதழ் படிப்பையும் கேரளக் கலாமண்டலத்தில் பட்டப்படிப்பையும் பயின்றுள்ளார மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயரின் [3] சீடரும் அவரது மைத்துனருமான சதானந்தனின் சுவரோவியப் பணியால் ஈர்க்கப்பட்ட பிந்துலேகா சுவரோவியக் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். மேலும் ஆறு ஆண்டுகளாக இந்த வகையிலான பயிற்சியைப் பெற்றார்.

கலை பாணி[தொகு]

பிந்துலேகாவின் ஓவியங்கள் முக்கியமாக பாரம்பரிய சுவரோவிய ஓவியத்தையும் சமகால கலையையும் ஒன்றிணைத்து நவீன உணர்வைத் தருகின்றன. தான் ஒரு நடனக்கலையராக இருப்பதால் ஓவியங்களில் கை விரல் முத்திரைகைள், கலைநயமிக்க நுட்ப வேலைப்பாடுகள் எளிதாக இருத்ததாகவும் தொடங்கத்தில் தனது கை வலிக்கும் அளவிற்கு ஓவியங்களை வரைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.[4] வழக்கமாக வெளிர் சிவப்பு , செம்மஞ்சள் , மஞ்கள் போன்ற வண்ணங்களே பயன்படுத்தப்பட்டு வந்த வேளையில் அவரது சில சுவரோவிய படைப்புகள் புதுமையான பாணிகளையும், நீல நிறம் போன்ற சில அசாதாரண வண்ணங்களையும் கொண்டு அவரால் உருவாக்கப்பட்டது. இது பார்வையாளா்களுக்கு புலன் கடந்த ரசனையை தருவதாக அமைந்திருந்தது.

பிந்துலேகா தனது ஓவியங்களில் கருப்பொருளையும், அதில் நவீனபாணியை புகுத்தியதன் மூலம் ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார். வானத்தில் நடனமாடும் தும்பி ஓவியங்கள், ஆழ்கடலின் கடற்கன்னிகள், நடனத்தில் இருப்பதைப் போன்ற அன்னங்கள், ஒரு வகை உணர்வைத் தூண்டும் ஆடல் மங்கைகள் போன்ற கூறுகள் அன்றாட வாழ்க்கையிலிருந்து கற்பனைக்கு எட்டாத வெகு தொலைவில் உள்ளன. அவை இயற்கையின் ஆளுமை அல்லது தெய்வீகம் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அமைதியான வண்ணங்களில் பாரம்பரிய சுவரோவியங்களை மீறி விழுமியத்தை வெளிப்படுத்துகிறார் பிந்துலேகா. அஜந்தா ஓவியங்களை நினைவூட்டும் அவரது கற்பனைச் சிலைகள் இந்தியப் பாரம்பரியக் கலையின் தொடர்ச்சியைக் கொண்டுள்ளன. இயற்கையில் உள்ள மனிதர்களுக்கிடையேயான உறவுகளில் பூச்சிகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றையும் தனது ஓவியத்தில் கொண்டு வந்து வியக்க வைக்கிறார்.[5]

கலை வாழ்க்கை[தொகு]

திருச்சூரில் உள்ள திரூர் வடகுறும்பக்காவு கோவிலில் அவரது முதல் படைப்பு கேரள கோவில்களில் ஒரு பெண் கலைஞரால் வரையப்பட்ட முதல் சுவரோவிய ஓவியமாக கருதப்படுகிறது. தேவியின் மூன்று வடிவங்களைக் கொண்ட சுவரோவிய ஓவியத்தை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது . சரஸ்வதி (வெள்ளை நிற நிழல்களில்), பத்திரகாளி (அடர் நீல நிற நிழல்களில்) மற்றும் மகாலட்சுமி (சிவப்பு நிற நிழல்களில்). ஓவியங்களைக் கொண்ட இந்தக் கலைப்படைப்பு "ரஜஸ் தமஸ் சத்வா" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. [6] அவரது முதல் தனி நிகழ்ச்சியான சுவரோவிய ஓவிய கண்காட்சி 2004 இல் திருச்சூரில் உள்ள கேரள லலித்கலா அகாடமியின் கலைக்கூடத்தில் நடத்தப்பட்டது. பெங்களூரிலும், மும்பையிலும் நடத்தப்பட்ட குழு கண்காட்சிகளிலும் அவரது ஓவியங்கள் ஒரு பகுதியாக இடம்பெற்று இருந்தன. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்று முதல் 24 ஆம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தா்பார் மண்டபத்தில் அவரது ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

களமண்டலம் பிந்துலேகா மலையாள திரைப்பட இயக்குனர் மாதவ் ராமதாசன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

முக்கிய படைப்புகளின் பட்டியல்[தொகு]

  • மனோயானம் - கனவின் பயணம்
  • பாரம்பரியமும் அதற்கு அப்பாலும்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமண்டலம்_பிந்துலேகா&oldid=3238758" இலிருந்து மீள்விக்கப்பட்டது