கலாங் விரிகுடா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலாங்கு விரிகுடா புதிய 7 உலக இயற்கை விந்தைகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii, viii |
உசாத்துணை | 672 |
UNESCO region | ஆசிய அமைதிப் பெருங்கடல் பகுதி |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1994 (18ஆவது தொடர்) |
விரிவாக்கம் | 2000 |
கலாங் விரிகுடா (ஆங்கிலம்: Ha Long Bay) என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கேட் பா தீவு, டாவ் பீ தீவு, டாவ் கோ தீவு, போ கான் தீவு என்பது போன்ற சுண்ணாம்புத் தீவுகள் பல காணப்படுகின்றன. இத்தீவுகளில் டாவ் கோ தீவுப் பகுதியில் சுண்ணக்கல் விழுதுகள், சுண்ணக்கல் புற்றுகள் கொண்ட 20 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அழகிய நிறங்களுடைய குகைகள் பல இருக்கின்றன. இந்த விரிகுடாப் பகுதியில் மிதக்கும் கிராமங்கள் பல இருக்கின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதி “புதிய ஏழு உலக விந்தைகளுக்கான அறக்கட்டளை” அமைப்பு நடத்திய புதிய ஏழு இயற்கை உலக விந்தைகளுக்கான வாக்கெடுப்பில் இயற்கை ஏழு உலக விந்தைகளில் ஒன்றாகக் கடந்த நவம்பர் 11 2011 அன்று அறிவிக்கப்பட்டது.