கறுக்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pandalus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கறுக்காடி
உயிருடன் உள்ள கறுக்காடி இறால்கள் (மேலே), பொட்டு உறிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கபட்டுள்ள கறுக்காடி இறால்கள் (கீழே)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pandalus
இனம்:
இருசொற் பெயரீடு
Pandalus borealis
Krøyer, 1838

கறுக்காடி அல்லது வற்றல் இறால் (Pandalus borealis) என்பது வடக்கு அத்திலாந்திக் மற்றும் வடக்கு பசிபிக் பெருங்கடல்களின் குளிர்ந்த பகுதிகளில் காணப்படும் ஒரு வகை கரிடியன் இறால் ஆகும்.[1] இப்போது இவை ஒரு தனி இனமாக சிலரால் கருதப்படுகிறன.[2] ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இவற்றை வடக்கு இறால் என்று குறிப்பிடுகிறது. மற்ற பொதுவான பெயர்களாக இளஞ்சிவப்பு இறால், ஆழ்கடல் இறால், நோர்டிக் இறால், பெரிய வடக்கு இறால், வடக்கு இறால்,[1] குளிர்நீர் இறால் மைனே இறால் ஆகியவை ஆகும்.

பரவல்[தொகு]

கறுக்காடி இறால்களானது 20 முதல் 1,330 மீ (66-4,364 அடி) ஆழத்தில்,[1] 0 முதல் 8 °C (32-46 °F) வெப்பநிலை கொண்ட தண்ணீரில் மென்மையான சேற்றின் அடிப்பகுதியில், வாழ்கிறது.[3] இருப்பினும் இது 9 முதல் 1,450 மீ (30-4,757 அடி) ஆழம் வரையிலும், −2 முதல் 12 °C (28-54 °F) வெப்ப நிலை உள்ள இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[4] கறுகாடி இறால்கள் 32 முதல் 35 பிபிடி வரையிலான உப்புத்தன்மை கொண்ட உவர் நீரில் செழித்து வளர்கின்றன. இந்த இறால்களின் வாழ்க்கைச் சுழற்சி அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து அமைகிறது.[5] இதை ஒரு கிளையினமாக கருதுவதற்குப் பதிலாக, வட பசிபிக் மக்கள் பெரும்பாலும் ஒரு தனி இனமாக அங்கீகரிக்கின்றனர்.

உடலியல்[தொகு]

சிவப்பு நிற மிகளாய் வற்றல் போன்ற தோற்றம் கொண்டது இந்த இறால்கள் ஆகும். இவற்றின் எட்டு ஆண்டு ஆயுட்காலத்தில்,[6] ஆண் இறால்கள் 12 செ.மீ (4.7 அங்குலம்) நீளம்வரையும், பெண் இறால்கள் 16.5 செமீ (6.5 அங்குலம்) நீளம்வரை எட்டுகின்றன.[1] இவை அளிவில் சிறிய இறால்கள் ஆகும்.[6] இந்த இறால்கள் தங்கள் பல்வேறு வயது, இறாலின் அளவு, நீரின் வெப்பநிலை மாற்றங்கள் போன்றவற்றால் பாலின மாற்றம் அடைகின்றன.[7] நீரின் வெப்பநிலை அதிகரிப்புது வேகமான வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளது.[7]

இந்த இறால் ஒரு இருபாலுயிரி ஆகும். குறிப்பாக இவை ஆணாகப் பிறக்கிறன. ஆனால் ஏறக்குறைய இரண்டரை வயதுக்குப் பிறகு இவற்றின் விரைகள் கருப்பைகளாக மாறி பெண்ணாக ஆகின்றன. பின்னர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பெண்ணாகவே வாழ்ந்து முடிக்கிறன.[6] இந்த இறாலின் முட்டையிடும் பருவம் கோடையின் பிற்பகுதியில் பொதுவாக கடலில் தொடங்குகிறது. இலையுதிர்காலத்தின் துவக்கத்தில், பெண் இறால்கள் தங்கள் வயிற்றில் இருந்து முட்டைகளை வெளியேற்றத் தொடங்குன்றன. இந்த சமயத்தில் இவை கரையோரமாக நகரும். குளிர்காலத்தில் இவற்றின் முட்டைகள் குஞ்சு பொரிக்கும்.[7]

பயன்கள்[தொகு]

இந்த இறால்கள் மனிதர்களுக்கு உணவாவதும் அல்லாமல் வேறு வகைகளிலும் பயன்படுகின்றன. இதன் மேலோட்டில் ஒரு நொதியம் உள்ளது. அதில் இருந்து சிட்டோசன் என்ற வேதிப் பொருள் பெறப்படுகிறது. இது காயங்களுக்கு மருந்தாகவும், திராட்சைச் சாற்றை வடிகட்டவும், இயற்கை வேளாண்மையில் மண்ணை வளப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Pandalus borealis (Krøyer, 1838)". Species Fact Sheet. Food and Agriculture Organization. பார்க்கப்பட்ட நாள் November 2, 2010.
  2. Fransen, Charles (2019). "Pandalus Leach, 1814". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  3. Muus, B., J. G. Nielsen, P. Dahlstrom and B. Nystrom (1999). Sea Fish. pp. 284–285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8790787005
  4. வார்ப்புரு:SeaLifeBase species
  5. TJ. "Coldwater Shrimp: Catch has been declining for more than a decade - Eurofish Magazine". eurofishmagazine.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
  6. 6.0 6.1 6.2 "Responsible Sourcing Guide: Cold-water Prawns Version 1.1" (PDF). Seafish. April 2007. Archived from the original (PDF) on 4 September 2009. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
  7. 7.0 7.1 7.2 "species - Atlantic States Marine Fisheries Commission". www.asmfc.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுக்காடி&oldid=3928644" இலிருந்து மீள்விக்கப்பட்டது