கைட்டோசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கைட்டோசேன் (Chitosan)
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 9012-76-4
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் D-குளுக்கோசமைன், N-அசிடைல்குளுக்கோசமைன் (ஒருபடிகள்)
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

கைட்டோசேன் (Chitosan) /ˈktɵsæn/ என்பது ஒரு நேரியல் பலசர்க்கரை (polysaccharide) ஆகும். இது ஒழுங்கமைவின்றி (random) அமைந்த β-(1-4)-பிணைப்புடைய D-குளுக்கோசமைனையும் (அசிட்டைல் நீக்கப்பட்ட அலகு) N-அசிடைல்குளுக்கோசமைனையும் (அசிட்டைலேற்றப்பட்ட அலகு) கொண்டது. இது கூனிறால் (shrimp) போன்ற பல வெளிஓடுடைய உயிரினங்களின் (crustacean) ஓடுகளைக் கார சோடியம் ஐட்ராக்சைடுடன் வினைபுரியவைத்துப் பெறப்படுகிறது

கைட்டோசேன் உயிரிமருத்துவத்தில் (biomedical) பல வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது விவசாயத்தில் விதை நேர்த்திக்கும் உயிரி பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்கள் பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்துப் போரிட உதவுகிறது. இது ஒயின் உற்பத்தியில் ஒருங்காக்கும் காரணியாகப் (fining agent) பயன்படுத்தப்படுகிறது. இது தொழிலகங்களில் தானாக உரியும் பாலியூரித்தேன் வண்ணப் பூச்சாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இது புண்களுக்குப் போடப்படும் ஒட்டுகளில் (bandages) பயன்படுகிறது. இது குருதிப் போக்கைக் குறைப்பதோடு பாக்டீரிய எதிர்ப்புக் காரணியாகவும் செயல்படுகிறது. இது தோல் வழியாக மருந்துகளைச் செலுத்தவும் பயன்படுகிறது.

மிகவும் சச்சரவுக்குரிய வகையில், கைட்டோசேன் கொழுப்பை உறிஞ்சத்தக்கது என்று வகைப்படுத்தப்பட்டு, உணவுக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு உறுதியான தக்க எதிர்ப்பும் நிலவுகிறது.

ஆய்வு செய்து அறியப்பட்டதில் கைட்டோசேன் ஒரு கரையத்தகு உணவு நார்ப்பொருள் (soluble dietary fiber) ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைட்டோசேன்&oldid=1489274" இருந்து மீள்விக்கப்பட்டது