கர்நாடக சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடக சமையல் (Karnataka cuisine) என்பது கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் சமூகங்களிலும் உள்ள பாரம்பரிய உணவு வகைகளைக் குறிப்பதாகும். இதில் வடகர்நாடக உணவு, தென்கர்நாடக உணவு, உடுப்பி சமையல், சரஸ்வத் உணவு, குடகு சமையல், மங்களூர் கத்தோலிக்க உணவு மற்றும் நவயத் உணவுகள் அடங்கும்.[1][2] மைசூர்பாகு, மைசூர் மசாலா தோசை, சொளவ் சொளவ் பாத், பிசிபெலா பாத் முதலியன குறிப்பிடத்தக்கச் சைவ உணவுகளாகும்.. கர்நாடக உணவு வகைகளின் சுவையும், வகைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. வடகர்நாடக உணவுகள் முக்கியமாக சைவ உணவு முறையினைப் பற்றியது என்றால், கடலோரப் பகுதி உணவுகள் கடல் மீன்களைச் சார்ந்தவையாக உள்ளன. குடகு பகுதியில் இறைச்சி சார்ந்தும், மங்களூர் பகுதி உணவு தேங்காய் மற்றும் உள்ளூர் மசாலாப் பொருட்களின் செழுமையுடன் உள்ளது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "6 Things You Need to Know About Karnataka's Local Cuisine". Culture Trip.
  2. "Forgotten Flavours". Deccan Herald.
  3. Dhaarna (2021-11-08). "Karnataka Cuisine: Top 22 Karnataka Dishes To Try In 2022" (ஆங்கிலம்). 2022-03-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_சமையல்&oldid=3405273" இருந்து மீள்விக்கப்பட்டது