கரிய அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருந்தலை அரிவாள் மூக்கன்
Pseudibis papillosa.jpg
கருந்தலை அரிவாள் மூக்கன், குசராத்து, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: Threskiornithidae
பேரினம்: Pseudibis
இனம்: P. papillosa
இருசொற் பெயரீடு
Pseudibis papillosa
(தெமிங்கு, 1824)

கரிய அரிவாள் மூக்கன் அல்லது செங்கழுத்து அரிவாள் மூக்கன் அல்லது இந்திய கரிய அரிவாள் மூக்கன்[2] (ஆங்கிலத்தில்: Black ibis அல்லது Red-naped ibis; Pseudibis papillosa) என்பது அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சேர்ந்த கருநிறப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் சில இடங்களில் காணப்படுகின்றது. இதன் கால்கள் செம்மண் நிறச்சிவப்பானவை. முடியில்லாத தலையும் தோளின் அருகே நன்றாகத் தெரியும் வெள்ளைப் பட்டையும் இதன் அடையாளங்களாகும். கருந்தலை அரிவாள் மூக்கன்கள் விவசாயத்துக்காகப் பண்படுத்தப்பட்ட நிலங்களையொட்டித் திறந்த வெளியில் கூட்டமாக நின்று மேயக்கூடியவை.

இது அரிவாள் மூக்கன் இனத்திலுள்ள மற்ற பறவைகளைப் போன்று நீர்நிலைகளில் மட்டுமில்லாமல் வறண்ட நிலத்திலும் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pseudibis papillosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிய_அரிவாள்_மூக்கன்&oldid=2563726" இருந்து மீள்விக்கப்பட்டது