உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிமா சிங்
சட்டப் பேரவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
2017–பதவியில்
முன்னையவர்கயத்திரி பிரசாத் பிரஜாபதி
தொகுதிஅமேதி சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சஞ்சய் சிங்
வாழிடம்(s)அமேதி, உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிபதவியில்
தொழில்அரசியல்வாதி

கரிமா சிங் (Garima Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியாவில் உத்தரபிரதேசத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சிங் உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள அமேதி சட்டப் பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

கரிமா சிங் மற்றொரு அரசியல்வாதியான சஞ்சய சிங் என்பவரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். தேசிய இறகுப்பந்தாட்ட வாகையாளரான சையத் மோடியின் விதவையான அமீதா சிங்கை தான் திருமணம் செய்து கொண்டதாக சஞ்சய் கூறுகிறார். ஆனால் கரிமா அந்த சட்டபூர்வமான திருமணத்தை சவால் செய்து நீதி மன்றம் சென்றார். 1995 ஆம் ஆண்டில் அமீதாவுடனான திருமணத்திற்கு முன்னதாக இவருக்கும் சஞ்சய்க்கும் இடையே நடந்த பரஸ்பர விவாகரத்து செல்லாது என்று இந்திய உயர்நீதிமன்றமும் இந்திய உச்சநீதிமன்றமும் அறிவித்தன. சஞ்சய் நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் அமீதாதான் தனது சட்டபூர்வமான திருமணமான ஒரே மனைவி என்று கருதுகிறார். கரிமா மற்றும் சஞ்சய்க்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். [1]

திருமண சர்ச்சை

[தொகு]

சஞ்சய் சிங்கை அமேதி மன்னர் இரஞ்சன் சிங் தத்தெடுத்தார். இந்தியாவில் அரச குடும்பத்துக்கான அனைத்து அரச சலுகைகளையும் ரத்து செய்வதற்கு முன்பு அவரது வாரிசாக அவர் முன்னாள் அரச சொத்துக்களைப் பெற்றிருந்தார். 1989ஆம் ஆண்டில், சமீபத்தில் விதவையான அமீதாவுடன் உறவைத் தொடங்கிய பின்னர் அவர் தனது மனைவி கரிமாவை அரண்மனையிலிருந்து வெளியேற்றி விட்டார். 2014ஆம் ஆண்டில், கரிமாவும் இவரது குழந்தைகளும் அமேதியில் பூபதி பவன் என்று அழைக்கப்படும் மற்றொரு அரண்மனையில் குடியேறினர். மேலும் அமேதியிலிருந்தும் நகர மறுத்தனர். உள்ளூர் மக்கள் இவருக்கு ஆதரவாக இருந்தனர், அமீதாவை விட இவர்தான் உண்மையான இராணி என்றும் கூறினர். [2]

கூற்று மற்றும் எதிர்-கூற்றுக்கு இடையே, சஞ்சயின் மகனான அனந்த் விக்ரம் சிங், தனது முன்னாள் அரச சொத்துக்களான அமீதா தனது எதிர்கால வாரிசைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகக் கூறி அவரது தாயின் ஆதரவைப் பெற்றார். சஞ்சய் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மேலும் உள்ளூர் மக்களை வழக்கமான முறையில் குடும்பம் கவனிக்கவில்லை என்ற கூற்றுகளையும் மறுக்கிறார். கரிமா தனது குழந்தைகளுக்கு ஆதரவாக அரண்மனைக்குள் நுழைந்ததாகக் கூறுகிறார். சஞ்சய் மற்றும் அமீதா தங்கள் உறவைத் தொடங்கியதிலிருந்து எழுந்த பிரச்சனைகளுக்கு அமீதாவை குற்றம் சாட்டினர். [3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

கரிமா சிங், 2017இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, சமாஜ்வாதி கட்சியின் காயத்ரி பிரசாத்தை 5,065 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [4] அந்த தேர்தலில் மற்றொரு போட்டியாளராக இருந்த அமீதா சிங், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக நின்றார். இந்தியாவின் முன்னாள் பிரதமரான வி. பி. சிங்கின் உறவினரான கரிமா உள்ளூர் மக்களின் அனுதாபத்தை பயன்படுத்தி இந்த இடத்தை வெல்வார் என்று பரதிய ஜனதா கட்சி நம்பியது. [5] இரண்டு பெண்களும் தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சஞ்சய் சிங்கை தங்கள் துணைவராக பெயரிட்டனர். பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர்கள் இந்த முடிவு உண்மையில் நீண்டகால குடும்ப நாடகம் பற்றிய வாக்காளரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினர். [6]

சான்றுகள்

[தொகு]
  1. Battle Of Amethi, II, Outlook India.
  2. Srivastava, Piyush (12 February 2017). "'Queens' & knight in Amethi battle". The Telegraph. https://www.telegraphindia.com/1170212/jsp/nation/story_135347.jsp. பார்த்த நாள்: 2018-02-07. 
  3. Rai, Manmohan (20 September 2014). "Royal feud: 50-year-old Bhupati Bhavan Palace in Amethi locked in inheritance battle". The Times of India. http://articles.economictimes.indiatimes.com/2014-09-20/news/54135405_1_syed-modi-amethi-palace-coup. பார்த்த நாள்: 2018-02-07. 
  4. "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 2017-06-10. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
  5. Pathak, Vikas (17 February 2017). "Star wars in Amethi: Amita versus Garima". The Hindu. http://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/Star-wars-in-Amethi-Amita-versus-Garima/article17315307.ece. பார்த்த நாள்: 2018-02-07. 
  6. Agha, Eram (11 March 2017). "Riding Garima Singh's 'Sympathy Wave', BJP Storms Gandhi Bastion". News18. http://www.news18.com/news/politics/riding-on-garima-singhs-sympathy-wave-bjp-storms-gandhi-bastion-1359092.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமா_சிங்&oldid=3594334" இலிருந்து மீள்விக்கப்பட்டது