கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில்
Appearance
கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் பட்டுக்கோட்டைக்குத் வடக்கில் ஒரத்தநாடு செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் கரம்பயம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலில் மூலவராக முத்துமாரியம்மன் உள்ளார். வெயிற்காலத்தில் தோன்றும் வெப்ப நோய்களை ஏற்கும் அம்மனாக இவர் உள்ளார். அக்னி மகுடம் கொண்டு, மேலிரு கரங்களில் உடுக்கையும், வஜ்ராயுதமும், முன் வலது கரத்தில் சிறிய கத்தியும், இடது கரத்தில் கபாலமும் ஏந்திய நிலையில் உள்ளார். வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் மகர குண்டலமும் உள்ளது. [1]
அமைப்பு
[தொகு]ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.[1]