கரமனை ஜனார்தனன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரமனை ஜனார்தனன் நாயர்
படிமம்:Karamana Janardanan Nair.jpg
பிறப்புசூலை 25, 1936(1936-07-25)
இறப்பு24 ஏப்ரல் 2000(2000-04-24) (அகவை 63)
மற்ற பெயர்கள்கரமனை
பணிநடிகர்
பெற்றோர்
  • கரமனை குஞ்ஞுவீட்டில் ராமசாமி ஐயர்
    பார்கவையம்மா
[1]
வாழ்க்கைத்
துணை
ஜெயா[2]
பிள்ளைகள்

கரமனை ஜனார்தனன் நாயர் (Karamana Janardanan Nair) (25 சூலை 1936 – 24 ஏப்ரல் 2000) 1980கள் -1990களில் மலையாள திரைப்பட நடிகர்களில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்தார்.[3] குறிப்பாக அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தயம் (1981) திரைப்படத்தில் கதாநாயகனின் பாத்திரத்திற்காக இவர் பரந்த பாராட்டைப் பெற்றார்.[4] 1988ஆம் ஆண்டில் வெளியான மம்மூட்டியின் நடிப்பில் கே.ஜி. ஜார்ஜ் இயக்கிய மட்டோரல் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கடைசி பாத்திரம் எஃப்.ஐ.ஆர் (1999) திரைப்படத்தில் திருத்தந்தை பவுலாசாக நடித்தார். இப்படம் வெளியான ஒரு வருடம் கழித்து இறந்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் கரமனை குஞ்ஞுவீட்டில் ராமசாமி ஐயருக்கும், பார்கவியம்மாவிற்கும் 1936 சூலை 27 அன்று பிறந்தார். அவர் முதன்மைக் கல்வியை சலாய் அரசு மாதிரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு , திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படித்தபோது மாணவர் கூட்டமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் பட்டம் , [[அனைத்திந்திய வானொலியின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணியாற்றினார். திருவனந்தபுரம் நாடகக் கழகங்களில் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் 1962 இல் தேசிய நாடகப் பள்ளியில் படிக்கச் சென்றார். [5]

இவர் ஜெயா என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு சுனில், சுதீர், சுஜய் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மகன் சுதீர் கரமனையும் ஒரு நடிகராவார்.[6]

இறப்பு[தொகு]

நீண்டகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஏப்ரல் 24, 2000 அன்று 64 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]