உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1முனைவர் பால.இரமணி[1]2013
2முனைவர் செ.வை.சண்முகம்2014
3கோ.செல்வம்2015
4இலங்கை ஜெயராஜ்2016
5சுகி. சிவம்2017
6முனைவர் க. முருகேசன்2018
7முனைவர் சரசுவதி இராமநாதன்2019
8மருத்துவர் எச்.வி. ஹண்டே2020
9பாரதி பாஸ்கர்2021
10மா. இராமலிங்கம் [2]2022
11முனைவர் ம.பெ.சீனிவாசன் [3],[4]2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருதுகள் (தினமணி செய்தி)
  2. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  3. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்_விருது&oldid=4192743" இலிருந்து மீள்விக்கப்பட்டது