கமலா சகானி
| கமலா சகானி | |
|---|---|
| பிறப்பு | 1912 செப்டம்பர் 14 இந்தூர், மத்திய பிரதேசம், இந்தியா |
| இறப்பு | 1998 ஜூன் 28 (வயது 85) புது தில்லி, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| துறை | உயிர்வேதியியல் |
| கல்வி கற்ற இடங்கள் | மும்பை பல்கலைக்கழகம், மும்பை. நியூஹோம் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | முதல் இந்தியப் பெண் அறிவியலாளர் |
| துணைவர் | எம். வி. சகானி |
கமலா சகானி (Kamala Sohonie) (1912 செப்டம்பர் 14 முதல் 1998 ஜூன் 28 வரை) என்பவர் ஓர் இந்திய உயிர்வேதியியலளர் ஆவார். 1939 ஆம் ஆண்டில் அறிவியல் புலத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண்மணியும்[1][2], பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் இந்தியரும்[3] ஒரு முன்னோடி இந்திய உயிர்வேதியியலாளரும் ஆவார்.[4] பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம் பெண்கள் முதல் தடவையாக அதன் வரலாற்றில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்தார்.[5]
பருப்பு வகைகள், நெல் போன்றவற்றிலிருந்து கிடைக்க வேண்டிய வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை கிடைக்காத மக்களுக்கு அதை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதாக இவரது ஆய்வு இருந்தது[6][7].பனை மரத்திலிருந்து பிரிக்கப்படும் நீராஎன்று பானத்தின் நன்மைகள் பற்றிய அவரது ஆராய்ச்சிப் பணியானது[8], குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களின் ஆலோசனையினால் ஊக்கம் பெற்றது. பின்னர் இப்பணிக்காக அவரிடமே குடியரசுத் தலைவர் விருது பெற்றார் பரணிடப்பட்டது 2019-03-12 at the வந்தவழி இயந்திரம்
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கமலா சொஹோனே 1912 ஆம் ஆண்டில் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரின் தந்தை நாராயணராவ் பகவத் மற்றும் அவரது மாமா, மாதவராவ் பகவத் ஆகியோர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் வேதியியலாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆவர். கமலா குடும்ப பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தார். பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் 1933 வேதியியல் (முதன்மை) மற்றும் இயற்பியலில் (துணை) பட்டம் பெற்றார். இவர் ஆய்வு உதவிக்காக இந்திய அறிவியல் கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது விண்ணப்பம் அன்றைய இயக்குநர் சி. வி. இராமனால் பெண்களுக்கு ஆராய்ச்சி தகுதி இல்லையென ஏற்கப்படவில்லை.[1] பின்னர் ஓராண்டுக்கு இவர் தகுதிகாண் நிலையில் வைக்கும் கட்டுத்தளையோடு அங்கே ஆய்வு செய்ய ஏற்கப்பட்டுள்ளார்.[9]
வாழ்க்கைப்பணியும் ஆய்வும்
[தொகு]இராமனின் கட்டுத்தளைகளையேற்று 1933 இல் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியேற்றுள்ளார். இவ்ரது வழிகாட்டி சிறீ. சிறீனிவாசய்யா. பேர. இராமன் இவரது தகுதி கண்டு வியந்து மேலும் தொடர்ந்து ஆய்வில் தொடர ஏற்பு அளித்துள்ளார். இவர் உணவுப்பொருள்களில் உள்ள புரதங்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது இவருக்கு உயிர்வேதியியல் முதவர் பட்டத்திற்கு வழிவகுத்துள்ளதுnd. பிறகு இவர் முனைவர் டெரிக் இரிச்சுட்டரின் க்கிழ் ஆய்வு செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் உயிர்வேதியியலாலர் இராபின் கில்லிடம் ஆய்வு செய்து உயிர்க்கல நொதியான சைட்டொகுரோம் சி யைக் கண்டுபிடித்துள்ளார்.[10] இந்த ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து இவர் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் ஆய்வு முடிபுகள் சுருக்கமாக 40 பக்கங்கள் அளவில் அமைந்தது.
கமலா 1939 இல் இந்தியாவுக்குத் திரும்பினர். இவர் புது தில்லி சீமாட்டி ஆர்டிஞ்சே மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் அமர்த்தப்பட்ட்டார். பின்னர், குன்னோர் ஊட்டச் சத்து ஆய்வகத்தில் பணிபுரிந்தார்.[10] சகானியை 1947 இல் மண்ந்த பிறகு, இவர் பம்பாய்க்கு (மும்பைக்கு) இடம்பெயர்ந்தார். பாமாய் அரசு அறிவியல் நிறுவனத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார. அங்கு இவர் பருப்புகளின் ஊட்டக் கூறுபாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இவர் குழந்தைகளுக்கன அரிய ஊட்டச் சத்தான நீரா பற்றிய ஆய்வுக்காக குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார்.[10] இவர் பங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் இயக்குராக பணிபுரிந்துள்ளார்.
இறப்பு
[தொகு]கமலா சகானி புது தில்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் நிகழ்த்திய விழாவில் பாராட்டப்பட்டுத் திரும்பியதும் உடல்நலம் குலையவே விரைவில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Gupta, Aravind. "Kamala Sohonie" (PDF). Indian National Science Academy. Retrieved 19 October 2012.
- ↑ "The Glass Ceiling: The why and therefore" (PDF). Vigyansagar. Government of India. Archived from the original (PDF) on 6 மார்ச் 2016. Retrieved 19 October 2012.
- ↑ https://scientificwomen.net/women/sohonie-kamala-118
- ↑ https://www.thebetterindia.com/91026/kamala-sohonie-india-woman-scientist-iisc-cambridge/
- ↑ "How Kamala Sohonie Defied Gender Bias & Became the First Indian Woman PhD in Science". The Better India. 10 March 2017. https://www.thebetterindia.com/91026/kamala-sohonie-india-woman-scientist-iisc-cambridge/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-12. Retrieved 2019-03-11.
- ↑ https://www.ias.ac.in/article/fulltext/reso/021/04/0301-0314
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "Kamala Sohonie". Streeshakti. Retrieved 19 October 2012.
- 1 2 3 Dhuru, Vasumathi. "The scientist lady" (PDF). Indian Association of Scientists. Retrieved 19 October 2012.