கனிமூலம்
கனிமூலம் (ore) அல்லது தாது உலோகங்கள் உட்பட்ட முக்கியமான தனிமங்கள் அடங்கிய கனிமங்களை உள்ளடக்கிய கற்களாகும். கனிமூலங்கள் சுரங்கங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்றன; இவை பின்னர் "சுத்திகரிக்கப்பட்டு" மதிப்புமிக்க தனிமங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அனைத்துக் கற்களிலும் தனிமங்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன என்றபோதும் பொருளியல் வரையறைப்படி இலாபகரமாக கனிமங்களை (பொதுவாக உலோகங்களை) வெளிக்கொணரக்கூடியவையே கனிமூலங்களாகும். கற்களில் உள்ள கனிமம் அல்லது உலோகத்தின் அடர்த்தி, தரம் மற்றும் எந்த வடிவில் கிடைக்கிறது என்பன சுரங்கவியல் செலவுகளை நேரடியாக பாதிக்கக் கூடியவை. கிடைக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு, அகழ்ந்தெடுத்து சுத்திகரிப்பதன் செலவினை ஈடு கட்டி இலாபம் காணக் கூடியதாக இருக்க வேண்டும்.
உலோக கனிமூலங்கள் பொதுவாக சல்பைடுகளாகவும் சிலிகேட்டுகளாகவும் அல்லது "கலப்பில்லாத" உலோகமாகவும் கிடைக்கின்றன. இத்தகைய கனிமூலங்கள் பல்வேறு நிலவியல் செயற்பாடுகளால் உருவாகின்றன. இந்த செயற்பாடுகள் கனிமூல உருவாக்கம் என அறியப்படுகின்றன.
முக்கியமான கனிமூலங்கள்
[தொகு]- அர்ஜெனைட்: Ag2S வெள்ளி பெறுவதற்கு
- பாரைட்: BaSO4
- பாக்சைட் Al2O3 அலுமினியம் பெறுவதற்கு
- பெரைல்: Be3Al2(SiO3)6
- போர்னைட்: Cu5FeS4
- காசிடெரைட்: SnO2
- சால்கோசைட்: Cu2S செம்பு பெறுவதற்கு
- சால்கோபைரைட்: CuFeS2
- குரோமைட்: (Fe, Mg)Cr2O4 குரோமியம் பெறுவதற்கு
- சின்னபார்: HgS பாதரசம் பெறுவதற்கு
- கோபாலைட்: (Co, Fe)AsS
- கொலம்பைட்-டான்டலைட் அல்லது கோல்டான்: (Fe, Mn)(Nb, Ta)2O6
- கலெனா: PbS
- தங்கம்: Au, வழமையாக குவார்ட்ஸ் படிகங்களுடன் அல்லது மணற்பாங்கான சுரங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது
- ஏமடைட்: Fe2O3
- இலிமெனைட்: FeTiO3
- மேக்னடைட்: Fe3O4
- மாலிப்டெனைட்: MoS2
- பென்ட்லான்டைட்:(Fe, Ni)9S8
- பைரோலூசைட்:MnO2
- ஷீலைட்: CaWO4
- இசுபேலரைட்: ZnS
- யூரேனினைட்: UO2 உலோக யுரேனியம் பெறுவதற்கு
- உல்ப்ரமைட்: (Fe, Mn)WO4