கனாக்கு மக்கள்
![]() நியூ கலிடோனியாவின் ஒரு கொடியும், கனாக்கு சமூகத்தின் கலாச்சாரக் கொடியும் | |
![]() நியூ கலிடோனியாவில் கனாக்கு பெண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
104,958 (2014) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 104,958[1] |
![]() | 90,000 |
மொழி(கள்) | |
பிரெஞ்சு • நியூ கலிடோனிய மொழிகள் |
கனாக்கு (Kanak, பிரெஞ்சு: Canaque) எனப்படுவோர் பிரான்சின் கடல்கடந்த மண்டலமும், தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ளதுமான நியூ கலிடோனியாவில் வாழும் பழங்குடி மெலனீசிய இனத்தவர் ஆவர். 2014 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நியூ கலிடோனியாவின் 39.1% மக்கள் (104,000) கனாக்குகள் ஆவர்.[1]
நியூகலிடோனியாவில் மெலனீசியக் குடியேற்றம் லப்பித்தா பண்பாட்டுக் காலத்திலேயே (கிமு 1600 முதல் கிபி 500) இடம்பெற்றுள்ளது. ஆனாலும் கனாக்கு மக்களின் ஆரம்பம் அறியப்படவில்லை. பொலினேசிய கடற்பயணிகள் கனாக்கு மக்களுடன் பல நூற்றாண்டுகளாக தமக்கிடையே திருமண உறவில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[2][3] நியூகலிடோனியாவின் ஐரோப்பியக் குடியேறிகளால் கனாக்குகள் கால்டோச்சிகள் என அழைக்கப்படுகின்றனர். கனாக்கு மக்களின் ஓவியங்களும், கைவேலைப்பாடுகளும் இங்கு மிகப் பிரபலமானவை ஆகும்.
நியூகலிடோனியா 1853 இல் பிரான்சுடன் இணைக்கப்பட்டு 1956 இல் பிரான்சின் கடல்கடந்த மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 1967 இல் விடுதலை இயக்கத்தினரின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் பிரான்சிடம் இருந்து முழுமையான விடுதலை கோரிய போராட்டம் 1984 இல் மீண்டும் ஆரம்பமானது. விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு 1988 ஆம் ஆண்டில் பிரான்சுக்கும் நியூகலிடோனியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. விடுதலை இயக்கத்தின் கனாக்குத் தலைவர் சான்-மரீ சிபாவு 1989 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.[4] இவரது நினைவாக தலைநகர் நூமியாவில் கலாசார நிலையம் ஒன்று 1998 இல் திறக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Weston, Richard (2 September 2004). Plans, sections and elevations: key buildings of the twentieth century. Laurence King Publishing. பக். 224–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85669-382-0. https://books.google.com/books?id=3xC94YX9GLcC&pg=PA224. பார்த்த நாள்: 8 June 2011.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).