கந்தமாதன் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தமாதன குன்று (Mt. Gandhamadana) என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையே பாக்கு நீரிணையில் அமைந்துள்ள பாம்பன் தீவின் உயரமான முகடு ஆகும்.

அமைவிடம்[தொகு]

கந்தமாதன குன்றின் மேலிருந்து பாம்பன் தீவின் மேற்குப் பகுதி ஒரு பார்வை.

கந்தமாதன குன்று, இராமேசுவரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில், கிட்டத்தட்ட தீவின் மேற்கு எல்லையில் உள்ள அழிந்த நகரான தனுஷ்கோடிக்கு செல்லும் பாதையின் இடையே உள்ளது.

வரலாறு[தொகு]

கந்தமாதன மலைக் குன்றின் உச்சியில் இருந்தே அனுமான் இராவணனின் ஆட்சிப் பகுதியான இலங்கைக்கு தாவியதாக நம்பப்படுகிறது. காளிதாசர் இயற்றிய குமாரசம்பவம் எனும் நூலில், இமய மலையில் உள்ளதாக கூறப்படும் புராண நகரான ஒசாதிபிரஸ்தாவை வெற்றிகொண்டதை பற்றிக் குறிப்பிடும்போது, கந்தமாதன குன்றை மேற்கோளாகச் சுட்டியுள்ளார்.

நாத சைவப் பாரம்பரியத்தில் பரசுராமர், தனது பழிவாங்கலை முடித்தப் பிறகு, வெளியேறி வந்து, இந்தக் குன்றின் உச்சியில் தத்தாத்ரேயரிடம் தெய்வநிலைச்சார்ந்த ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற்றார் எனக்கருதப்படுகிறது. இவர்களுக்குள் நடந்த உரையாடல்களைத் திரிபுரா ரகஸ்யம் என்று அத்வைதம் குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தமாதன்_குன்று&oldid=3610638" இலிருந்து மீள்விக்கப்பட்டது