கந்தக குளோரைடு ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கந்தக குளோரைடு ஐம்புளோரைடு
Sulfur chloride pentafluoride
SF5Cl.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐம்புளோரோகுளோரோசல்பானைல்
இனங்காட்டிகள்
13780-57-9 N
ChemSpider 109933 Yes check.svgY
பப்கெம் 123330
பண்புகள்
SClF
5
வாய்ப்பாட்டு எடை 162.510 g mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 6.642 g dm−3
உருகுநிலை
கொதிநிலை −19 °C (−2 °F; 254 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

கந்தக குளோரைடு ஐம்புளோரைடு (Sulfur chloride pentafluoride) என்பது SF5Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஐம்புளோரோசல்பைடு (SF5) வேதி வினைக்குழுவைப் பெற்றுள்ள பிற சேர்மங்களைப் போலவே இதுவும் அறை வெப்பநிலையில் நிறமற்ற வாயுவாகவும் அதிக நச்சுத் தன்மையுடனும் காணப்படுகிறது[1]. C4v சீரொழுங்கு கொண்ட எண்முக வடிவமைப்பினை இச்சேர்மம் ஏற்றுள்ளது. கரிமச் சேர்மங்களுடன் SF5 வேதிவினைக்குழுவை சேர்ப்பதற்கு ஏற்ற வினைப்பொருளாக, கந்தக குளோரைடு ஐம்புளோரைடு மட்டுமே வர்த்தகரீதியாகக் கிடைக்கின்றது[2].

வினைகள்[தொகு]

அதிக வினைத்திறனும் நச்சுத்தன்மையும் கொண்டுள்ள SF5Cl இன் பண்புகளுக்கு மாறாக கந்தக அறுபுளோரைடு (SF6) மந்த வினைத்திறனும் நச்சுத்தன்மையற்றும் காணப்படுகிறது. வேதி வாய்ப்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இவ்விரு சேர்மங்களுக்கு இடையிலான இவ்வேறுபாடு மூலக்கூறில் S-Cl பிணைப்பின் முக்கியத்துவத்தை அடையாளப் படுத்துவதாக உள்ளது.

தனி உறுப்பு பங்கேற்பு வினைகளில் இரட்டைப் பிணைப்புகளின் குறுக்காக SF5Cl சேர்கிறது. புரோப்பேன் பங்கு பெறும் பின்வரும் வினை இதற்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.

CH
3
CHCH
2
+ SF
5
Cl
→ CH3CH(Cl)CH2SF5

கூட்டு வினைகளில் 30 0 செ வெப்பநிலையில் மூவெத்தில் போரேன் வினையூக்கியாகச் செயல்படுவது போல SF5Br பயன்படுத்தப்படுகிறதுSF
5
Br
is used similarly.[2].

நான்குபுளோரோ ஐதரசீனில் இருந்து O(SF5)2 மற்றும் F2NSF5 தயாரிப்பதற்கான முன்னோடியாக SF5Cl விளங்குகிறது.

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

இரண்டு நிலைகள் குறைவான கந்தக புளோரைடுகளில் இருந்து, ( கந்தக நான்குபுளோரைடு மற்றும் இருகந்தக பதின்புளோரைடு ) வினையைத் தொடங்கும் பல்வேறு வகையான தொகுப்பு முறைகளில் கந்தக குளோரோ ஐம்புளோரைடு தயாரிக்க முடியும்:[1]

SF
4
+ Cl
2
+ CsFSF
5
Cl
+ CsCl
ClF + SF
4
SF
5
Cl
S
2
F
10
+ Cl
2
→ 2 SF
5
Cl

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nyman, F., Roberts, H. L., Seaton, T. "Sulfur Chloride Pentafluoride" Inorganic Syntheses, 1966, Volume 8, p. 160. எஆசு:10.1002/9780470132395.ch42
  2. 2.0 2.1 Dolbier, William R. et al (2006). "A convenient and efficient method for incorporation of pentafluorosulfanyl (SF5) substituents into aliphatic compounds". Journal of Fluorine Chemistry 127: 1302–10. doi:10.1016/j.jfluchem.2006.05.003.