உள்ளடக்கத்துக்குச் செல்

கத்திக்கட்டு சேவல் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கத்திக்கட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கத்திக்கட்டு சேவல் சண்டை என்பது சேவல் சண்டை வகைகளில் ஒன்றாகும்.[1] இதனை கத்திக் கால் சேவல் சண்டை, கத்திக்கட்டு என்றும் அழைப்பர். இந்த சண்டைக்காக அசில் எனப்படும் பெறுவிடை கோழி ரகங்களில் கத்திக்கால் கோழிகள் என்றொரு தனி வகை உள்ளது. இந்தக் கோழிகள் பொதுவாக அதிக உயரம் பறக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.

பெயர்க்காரணம்

[தொகு]

இந்த முறையில் சண்டையிட்டுக் கொள்ளும் சேவல்களின் கால்களில் இதற்கென தயாரிக்கப்பட்ட கத்திகள் கட்டப்படுகின்றன. சேவல்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது கத்தி கட்டப்படுவதால் "கத்திக்கட்டு" என்று அழைக்கப்படுகிறது. இதனை "சேவற்கட்டு" என்றும் அழைப்பார்கள்.

சேவல் வகைகள்

[தொகு]

கத்திக்கட்டு சேவல்களின் பெயர்கள், சேவல்களின் உடலிலுள்ள பொங்கு என்று அழைக்கப்படும் இறகுகளின் நிறத்தினைக் கொண்டு அறியப்படுகின்றன. பொதுவாக பஞ்சபட்சி சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றன ஐந்து பறவைகளின் பெயர்கள் சேவல்களுக்கு வழங்கப்படுகின்றன. அவையாவன,.

  • வல்லூறு
  • ஆந்தை
  • காகம்
  • கோழி
  • மயில்

இவையின்றி கீரி, பேடு, சித்திரப்புள்ளி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. [2]

நிறங்களின் அடிப்படையில்

[தொகு]

பட்சிகளின் அடிப்படையில் பெயர்கள் அழைக்கப்படுவதோடு, நிறங்களைக் கொண்டும் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன.

எண் வகை பெயர் துணை வகைகள் குறிப்பு
1 வள்ளுவர் காக வள்ளுவர்

கீரி வள்ளுவர்

பொன்ற வள்ளுவர்

பூத வள்ளுவர்

கோழி வள்ளுவர்

கழுத்து மற்றும் இறகுகளில் நீண்ட வண்ணக் கீற்றுகள்
2 காகம் பொன்றக் காகம்

செங்காகம்

கருங்காகம்

வெண் காகம்

கருமையும், சிவப்பும் கொண்ட இறகுகள்
3 கீரி செங்கீரி

காகக் கீரி

பொன்றக் கீரி

வள்ளுவக் கீரி

பூதிக் கீரி

கருங்கீரி

கட்டு கட்டாக வண்ணத் திட்டுகள் கொண்டவை
4 வெள்ளை கொக்கு வெள்ளை

பொன்ற வெள்ளை

5 கருப்பு காகக் கருப்பு

பேய்க் கருப்பு

6 பேடு சேவப்பேடு

கோழிப் பேடு

கரும்பேடு

வெண் பேடு

பொன்றப் பேடு

பூதப் பேடு

பேடு என்றால் பெட்டை போல தோற்றம் அளிக்கும் சேவல்

(பெட்டைமாறி என வெத்துக்காலில் அழைக்கின்றனர்)

7 சித்திரப்புள்ளி
8 பூதி காகப்பூதி சாம்பல் நிறம் கொண்டது
9 பொன்றம் பொன் நிறம் கொண்டவை

தயார் செய்தல்

[தொகு]

சண்டைக்காக சேவல் குஞ்சுகள் வர்க்கம், வளர்ப்பு ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றன. சேவல் சண்டையில் வென்ற சேவல்களின் குஞ்சுகளில் வளர்க்கப்படுகின்றன. ஒரு வயதுடைய சேவல்களை பட்டா என அழைக்கின்றனர். அவைகள் தரம் பார்க்கப்பட்டு கட்டுத்தரை எனப்படும் இடத்தில் கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டி வளர்க்கப்படுகின்றன சேவல் "கட்டுசேவல்" எனப்படுகின்றன.

சோளம், கம்பு போன்ற தானியங்கள் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. சேவலின் உடலை உறுதி செய்ய நடைபயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

சண்டை விதிமுறைகள்

[தொகு]
  • சேவல் கத்தியில் மயில்துத்தம் போன்ற எந்த விசத்தினையும் தடவுதல் கூடாது.
  • சண்டையில் கத்தி பட்டு சேவல் இறந்தாலோ, தோற்றாலோ அதனை கோச்சை என்பர்.[3] இந்த கோச்சை சேவல் ஜெயிக்கும் சேவலின் சொந்தக்காரருக்கு சொந்தமாகும். பல பகுதிகளில் இந்த கோச்சை சேவல் கறி சமைத்து உண்ணப் படுகிறது. வெகு சில இடங்களில் அதிக பணத்திற்கு விற்கப்படுகிறது.[4] இதனை கோச்சைக் கறி என்பர்.

அரசு விதிமுறைகள்

[தொகு]
  • சூதாட்டம் செய்தல் கூடாது[5]
  • கூர்மையான பொருட்களை பயன்படுத்துதல் கூடாது[5]
  • சண்டைக்கு விடும் முன்பு சேவல்களை மருத்துவர்களிடம் சோதனை செய்ய வேண்டும், அதே போல சண்டை முடிந்த பின்பும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும். [5]

சண்டை நடைபெறும் புகழ்பெற்ற இடங்கள்

[தொகு]

இலக்கியங்களில் கத்திக்கட்டு

[தொகு]

"கற்பனை சேவல்" எனும் சிறுகதை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் கத்திக்கட்டு சேவலை வளர்க்கும் நபருக்கும் சேவலுக்குமான உறவும், குடும்பத்தில் ஏற்படுகின்ற சச்சரவுகளும் இடம்பெற்றுள்ளன.

விமர்சனங்கள்

[தொகு]

கத்திக்கட்டு சண்டையின் போது சேவல்களின் காலில் கத்தி கட்டப்படுவதால் சேவல்கள் காயப்படுவதும், இறப்பதும் நடைபெறுகிறது. இதனால் விலங்கு நல ஆர்வலர்கள் கத்திக்கொண்டு சேவல் சண்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


புகைப்பட தொகுப்பு

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. குறிப்பு: சேவல் சண்டையில ‘வெற்போர்’, ‘கத்திக்கட்டு’ன்னு ரெண்டு வகை உண்டு. வெற்போர் வெறும் காலோட சேவல் போடற சண்டை. - தலைப்பு - போரட்ட குணத்தில் மனிதனை மிஞ்சியது சேவல் ஆடுகளம் வெற்றிமாறனின் அனுபவங்கள் - எழுத்தாளர்: வேணுஜி - குங்குமம் இதழ் நாள்:24 ஜனவரி 2011
  2. கட்டுரை - மயி்ல் சேவலுக்கு கிராக்கி - தினமலர் நாளிதழ் - 14 ஜனவரி 2011
  3. https://tamil.thehindu.com/tamilnadu/கரூர்-அருகே-களைகட்டிய-சேவல்-சண்டை/article5579855.ece/amp/
  4. https://tamil.thehindu.com/tamilnadu/கரூர்-அருகே-களைகட்டிய-சேவல்-சண்டை/article5579855.ece/amp/
  5. 5.0 5.1 5.2 க.ராதாகிருஷ்ணன். "சேவற்கட்டில் இருவர் பலியான சோகத்துக்குக் காரணமானவர்கள் யார்?". இந்து தமிழ் திசை.
  6. "பூலாம்வலசு சேவல்சண்டைக்கு உயர்நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி - சேவல்களுடன் குவிந்த சேவல் உரிமையாளர்கள்". ThanthiTV.com. 18 February 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]