கதிர்ப்பாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபுப்படி அமைந்துள்ள கதிர்ப்பாத்திரம்

கதிர்ப்பாத்திரம் (ஆங்கில மொழி: Monstrance) என்பது கத்தோலிக்க திருச்சபை, பழைய கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கம் ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட நற்கருணையினை நற்கருணை ஆராதனைக்காகவோ அல்லது நற்கருணை ஆசீரின் போதோ மக்களுக்கு காட்ட பயன்படுத்தப்படும் ஒரு வகை திருப்பாத்திரம் ஆகும். நடுக் காலத்தில் புனிதர்களின் அருளிக்கங்களை மக்களுக்கு காட்ட இவ்வகை பாத்திரங்கள் பயன்பட்டன. ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் நற்கருணையினைக் காட்டவே பயன்படுத்தப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் Monstrance என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான monstrare என்னும் இலத்தீன் சொல்லுக்கு காட்டுதல் என்று பொருள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Demonstrate" பரணிடப்பட்டது 2008-05-10 at the வந்தவழி இயந்திரம், The American Heritage Dictionary, men in Appendix I, Indo-European Roots
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்ப்பாத்திரம்&oldid=3238048" இலிருந்து மீள்விக்கப்பட்டது