கதர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதர் ஆறு
அமைவு
நாடுஈரான்
மாகாணம்மேற்கு அசர்பைசான் மாகாணம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
உருமியா ஏரி, ஈரான்
நீளம்100 km (62 mi)
வடிநில அளவு2,000 km2 (770 sq mi)(approx.)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி0.34 m3/s (12 cu ft/s)

கதர் ஆறு (Gadar River) ஈரான், துருக்கி, ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்திற்கு அருகே ஈரானிய சாக்ரோசு மலைகளில் உருவாகும் ஆறு ஆகும். இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து முதலில் தென்கிழக்கு திசை நோக்கி பாய்கிறது, பின்னர் உஷ்னு- சோல்டுஸ் பள்ளத்தாக்கு வழியாக தன் போக்கினை கிழக்கு நோக்கி மாற்றுகிறது. பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய பிறகு, இந்த ஆறு வடக்கே திரும்பி உருமியா ஏரியின் எல்லையில் சதுப்பு நிலங்களில் பாய்கிறது. ஆற்றின் நீளம் தோராயமாக 100 கிலோமீட்டர்கள் (62 மைல்கள்) ஆகும். இந்த ஆற்றின் வடிகால் படுகை 1900 சதுர கிலோமீட்டர்கள் (730 சதுர மைல்கள்) எனவும் 2123 சதுர கிலோமீட்டர்கள் (820 சதுர மைல்கள்) பலவாறு மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் நீர் வெளியேற்று வீதம் வினாடிக்கு 0.34 கன சதுர மீட்டர் (12 கன சதுர அடி) ஆகும். உஷ்னு-சோல்டுஸ் பள்ளத்தாக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஹசன்லு டெபே மற்றும் ஹஜ்ஜி ஃபிரூஸ் டெபே போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் சாட்சியமளிக்கின்றன. [1] [2]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Ghaheri, M.; Baghal-Vayjooee, M.H.; Naziri, J. (1999). Lake Urmia, Iran: A summary review. 8. பக். 19–22. doi:10.1023/A:1009062005606. 
  • Voigt, Mary M. (1983). Hajji Firuz Tepe, Iran: the Neolithic settlement. University Museum Monograph. Vol. 50. Philadelphia: University Museum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-934718-49-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதர்_ஆறு&oldid=3818786" இலிருந்து மீள்விக்கப்பட்டது