கண்வர்
Appearance
கண்வ மகரிஷி (ஆங்கிலம் : Kanva) (சமசுகிருதம்: कण्व káṇva), பண்டைய இந்தியாவின் ரிக் வேதகால முனிவர்களில் ஒருவர். அங்கரிசரின் மகன். கன்வ முனிவரின் ஆசிரமம் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாலினி ஆற்றாங்கரையில், கோட்துவாரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1] இவரே த்ரேதா யுகத்தை சேர்ந்த சகுந்தலையை வளர்த்தவர் ஆவார்.
மகாபாரதத்தில்
[தொகு]- மகாபாரத வரலாற்றின் படி, விசுவாமித்திர மகரிஷி – மேனகைக்கு பிறந்த சகுந்தலையை, கண்வ முனிவர் எடுத்து வளர்த்தார். மேலும் துஷ்யந்தன் – சகுந்தலைக்கு திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த மகன் அரசன் பரதனையும் ஆதரித்தவர்.[2]