கண்களின் குறைபாடுகள்
Appearance
குறைபாடற்ற கண்ணில், தூரத்தில் உள்ள பொருள்களில் இருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள், சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. வெகு தொலைவு முதல் 25.செ.மீ. அருகில் உள்ள பொருட்கள் வரை தெளிவாகப் பார்க்கும் வகையில் குறைபாடற்ற விழி ஏற்பமைவு பெற்றுள்ளது. இச்சரியான ஒளிச்சிதறல் நிலையை இமெட்ரோப்பியா (Emmetropia) என்பர். இமெட்ரோப்பியா நிலையினிலிருந்து மாறுபாடு அடைந்தால் அதனை ஏமெட்ரோபியா(Ametropia) என்பர். ஏமெட்ரோப்பியாவின் முக்கிய நிலைகள் மையோபியா (Myopia) ஹைப்பர் மெட்ரோபியா (Hyper Metropia) அஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) மற்றும் பிரஸ்பையோபியா (Prespiopia) ஆகும். ஏமெட்ரோபியாவிற்கான காரணம், கண் கோளம் நீளமாகுதல் அல்லது கண்ணின் ஒளிச்சிதறல் தன்மையில் வேறுபாடு ஏற்படுவதாகும்.[1][2]