கணியக்கோப்பு முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எளிமையான லினக்சு கருனியில், அதிகம் பயன்படுத்தப்படும் ext4 கோப்பு முறைமை அமைவும், அதன் தனித்துவ அடுக்குகளும் குறிக்கப் பட்டுள்ளன

கணியக்கோப்பு முறைமை (File system) என்பது கணினி அறிவியலில் கணினிக் கோப்புகளைச் சேமிக்கவும், சேமித்தவற்றை மீண்டும் எடுத்துப் பயன்படுத்தவும் பயன்படுத்தப்படும் முறைகளை விளக்குகிறது. ஒரு முறையான செயலாக்க நடைமுறைகள் இல்லாமல், பலவகையான கணினிக் கோப்புகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினமாகும். ஒரு கணினிக்/கணியக் கோப்பு முறைமையை, அதனதன் இயக்குதள வடிவம் தீர்மானிக்கிறது.

  • எனவே, பெரும்பான்மையோர் பயன்படுத்தப்படும் வின்டோசு கோப்பு முறைமை (FAT[1] NTFS[2])என்பதும், வழங்கிகளிலும், அதிநுட்ப, உயரிய ஆய்வுக்கூடங்களிலும், விண்வெளிக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை என்பதும் மிகவும் வேறுபாடுகளை உடையன ஆகும்.
  • வின்டோசு அல்லாத கணினிகளில், யூனிக்சு, யூனிக்சுவழி பிறந்த லினக்சு, உபுண்டு வழி கோப்பு முறைமைகளே(ext2, ext3,ext4) அதிகம் பயன்படுகின்றன. ஏனெனில், அவை தொடர்ந்து பல மாதங்கள் இயங்கினாலும், அவற்றின் கோப்புகள் மாற வடிவம் (not corrupted) கொண்ட திறன் மிக்கதாகவே திகழ்கின்றன.
  • திறமூல / கட்டற்ற வழி கோப்புகள்(ext2,ext3,ext4) மாக்(macOS) இயக்குதளங்களிலும்(Paragon ExtFS[3]), வின்டோசு இயக்குதளங்களிலும்([4]) பயன்பட வல்லன. அவற்றிற்கான கணியக் கட்டகங்களும் உள்ளன.
  • வின்டோசு, யூனிக்சு வழி இயக்குதள அடிப்படையிலான கோப்பு முறைமைகளைத் தவிர, வேறு சில கோப்பு முறைமைகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியக்கோப்பு_முறைமை&oldid=2487332" இருந்து மீள்விக்கப்பட்டது