கணினிக் கோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துளைக்கோப்பு என்பது தொடக்க கால கணினிக் கோப்புகளில் ஒன்றாகும்
அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள் பற்றி அறிய கோப்பு (அலுவலகம்) கட்டுரையைப் பார்க்க.

கணினிக் கோப்பு (Computer File) என்பது கணினியில் சேமிக்கப்பட்ட ஒரு தகவல் தொகுப்பாகும். கோப்பு(இலத்தீன்: filum[1]) ஒன்றின் தகவல் தொகுப்பை, அதன் கோப்புநீட்சிப் பெயரைக் கொண்டு, மீட்டெத்து கையாளலாம். இன்றைய கணினிகள் அனைத்திலும் தரவுகள் நிரல்கள் உட்பட அனைத்து தகவல்களும் கோப்புக்களாகவே சேமிக்கப்படுகின்றன. தகவலின் தன்மையைப் பொறுத்து கோப்புக்களின் வகை மாறும். இதை கோப்புப் பெயரின் நீட்சியைக் (extension) கண்டு அறியலாம். எடுத்துக்காட்டாக, .txtஎன்ற கோப்புநீட்சியானது, உரைக்கோப்பினைக் குறிக்கிறது. அதுபோலவே, .csv என்ற நீட்சி இருந்தால், அது அணித்தரவுக்கோப்பினையும், .ods என்ற நீட்சியை ஒரு கோப்புப் பெற்றிருந்தால், அது கட்டற்ற விரிதாள் என்பதையும் குறிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினிக்_கோப்பு&oldid=2466590" இருந்து மீள்விக்கப்பட்டது