கணிகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Plant cells with visible chloroplasts.

கணிகங்கள் (Plastid) என்னும் சொல் கிரேக்க பிளஸ்டொஸ் (plastós) என்னும் சொல்லில் இருந்து உருவாகியது. பளபளப்பான, ஒரு பெரிய இரட்டை மென்படலம் கொண்ட செல் உள் உறுப்பாக உயிரினங்களில் மத்தியில், குறிப்பாக தாவரங்கள் மற்றும் பாசிகளில் செல்கள் காணப்படுகின்றன.[1] செல்கள் பயன்படுத்தும் முக்கிய வேதிச்சேர்மங்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புத் தளமாகவும் உள்ளன. அவை பெரும்பாலும் ஒளிச்சேர்க்கைகளில் பயன்படுத்தப்படும் நிறமிகளைக் கொண்டிருக்கின்றன, தற்போதுள்ள நிறமிகளின் வகைகள் கலத்தின் நிறத்தை மாற்றலாம் அல்லது தீர்மானிக்கலாம். அவை ஒரு பொதுவான பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன மற்றும் புரோகாரியோடிக் கலங்களைப் போன்ற வட்ட வடிவான இரட்டைப் பிணைந்த டி.என்.ஏ மூலக்கூறை வைத்திருக்கின்றன.

தாவர செல்களில் உள்ள லியுகோபிளாஸ்டிட்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Origin and Evolution of Plastids: Genomic View on the Unification and Diversity of Plastids". The Structure and Function of Plastids. Advances in Photosynthesis and Respiration. 23. Springer Netherlands. 2006. பக். 75–102. doi:10.1007/978-1-4020-4061-0_4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-4060-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிகங்கள்&oldid=3456032" இருந்து மீள்விக்கப்பட்டது