கணக்காய்வாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்காய்வாளர் (English:Auditor) என்பவர் ஒரு நிறுவனத்தின் கணக்கு ஏடுகள், நிதியியல் ஆறிக்கைகள் மற்றும் கூற்றுகள் அந்த நிறுவனத்தின் நிதி நிலையைச் சரிவர காட்டுகிறதா என்று ஆய்வு செய்பவர் ஆவார். கணக்காய்வாளராக பணியாற்ற குறிப்பிட்ட சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் கணக்காய்வாளராக விரும்புபவர்கள் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பெற்று அக்கழகத்தின் உறுப்பினராகப் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். இந்தக் கணக்காய்வாளர்களை தணிக்கையாளர் என்றும் அழைப்பதுண்டு.

கணக்காய்வாளர் வகைகள்[தொகு]

ஒரு நிறுவனத்தில் இரண்டு வகையான கணக்காய்வாளர்கள் இருக்கின்றனர்.

அகக் கணக்காய்வாளர்

நிறுவனத்தின் அகக் கட்டுப்பாடு முறையின் வினைத்திறன் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்கும், அவை பற்றிய தனது முடிவினை முகமைக்கு அறிக்கையாகச் சமர்பிப்பதற்காகவும் அதன் நிர்வாகத்தால் நியமிக்கப்படுபவர்.

புறக் கணக்காய்வாளர்

இவர் நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வினை மேற்கொள்ளும் சுதந்திரமான நபர் ஆவார். இவர் கணக்குகளின் தேவைக்கேற்ப அகக் கணக்காய்வாளரின் உதவினை பெற்றுக் கொள்கிறார்.

இதையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்காய்வாளர்&oldid=3933496" இலிருந்து மீள்விக்கப்பட்டது