கட்வால் விசயலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்வால் விசயலட்சுமி
Gadwal Vijayalakshmi
விசயலட்சுமி 2021-ல்
18வது ஐதராபாத் மாநகரத் தந்தை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 பிப்ரவரி 2021
மாதே சிறீ இலதா ரெட்டி
முன்னையவர்போந்து இராம்மோகன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1964 (1964-06-21) (அகவை 59)[1][2]
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், (தெலங்காணா-தற்போது) இந்தியா
குடியுரிமைஇந்தியா
ஐக்கிய நாடுகள்[3]
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
துணைவர்பாபி ரெட்டி
பெற்றோர்
  • கே. கேசவ ராவ் (father)
வாழிடம்(s)ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
முன்னாள் கல்லூரிபாரதிய வித்தியா பவன்
சுல்தான் உலோம் சட்டக் கல்லூரி

கட்வால் விசயலட்சுமி (Gadwal Vijayalakshmi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பிப்ரவரி 11, 2021 முதல் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சியின் தற்போதைய நகரத்தந்தையாகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஆவார். இவர் ஓரு முன்னாள் அமெரிக்கக் குடிமகன் ஆவார். விசயலட்சுமி அரசியலில் சேர மீண்டும் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்.[3] மேலும் ஐதராபாத்தின் ஐந்தாவது பெண் மாநகரத்தந்தையாகவும், தெலங்காணா மாநிலத்தின் முதல் மாநகரத்தந்தையும் ஆவார்.[4][5] இவர் தெலங்காணாவைச் சேர்ந்த பாரத் இராட்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் ஆவார்.

இளமை[தொகு]

அரசியல்வாதி கே. கேசவ ராவ் மற்றும் வசந்த குமாரி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். ராவ் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2]

விசயலட்சுமி பாபி ரெட்டியை மணந்தார்.[6]

கல்வி[தொகு]

விஜயலட்சுமி ஐதராபாத்தில் உள்ள தூய மேரி பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிக் கல்வினையும், ஐதராபாத்தில் உள்ள ரெட்டி மகளிர் கல்லூரியில் இளநிலை கல்லூரிக் கல்வியினையும், பாரதிய வித்யா பவனில் இளங்கலை இதழியல் கல்வியினையும், ஐதராபாத் சுல்தான்-உல்-உலூம் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பினையும் முடித்தார்.

விசயலட்சுமி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து 1988-ல் அமெரிக்கக் குடியுரிமை பச்சை அட்டையினைப் பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் திருமணம் செய்துகொண்டு குடியேறினார். பின்னர், இவர் 1999-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.[4][3] அமெரிக்காவின் வட கரோலினாவில் தங்கியிருந்த கட்வால் விஜயலட்சுமி, டியூக் பல்கலைக்கழகத்தில் இருதயவியல் பிரிவில் ஆராய்ச்சி அறிஞராகப் பணியாற்றினார்.[2]

அரசியல்[தொகு]

2004ஆம் ஆண்டில், இவர் மீண்டும் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். இறுதியில் 2009-ல் தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார்.[7][4][3][8] 2016-ல் தெலங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பில் மாநகர உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020ல் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 11 பிப்ரவரி 2021 அன்று, 2014-ல் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு முதல் பெண் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hyderabad Mayor Gadwal Vijayalakshmi plants saplings, donats blood on her birthday". The Hans India. 22 June 2021. https://www.thehansindia.com/news/cities/hyderabad/hyderabad-mayor-gadwal-vijayalakshmi-plants-saplings-donats-blood-on-her-birthday-691937. 
  2. 2.0 2.1 2.2 "Mayor a highly educated and accomplished person". The Hindu. 11 February 2021. https://www.thehindu.com/news/cities/Hyderabad/mayor-a-highly-educated-and-accomplished-person/article33814972.ece. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Mayor post: Vijayalakshmi's citizenship under scrutiny". The Times of India. 8 February 2016.
  4. 4.0 4.1 4.2 Vibhavari, Sruthi (11 February 2021). "From renouncing US citizenship to becoming Hyderabad mayor, the story of Vijayalaxmi". The Siasat Daily.
  5. "Twin posts held by women for first time". The Hindu. 12 February 2021.
  6. "GHMC Mayor Gadwal Vijayalakshmi Love Story". Sakshi (media group). 14 February 2021. https://english.sakshi.com/news/hyderabad/ghmc-mayor-gadwal-vijayalakshmi-love-story-130378. 
  7. "Quarterly Publication of Individuals, Who Have Chosen To Expatriate, as Required by Section 6039G". Federal Register. February 26, 2010. பார்க்கப்பட்ட நாள் February 25, 2023.
  8. "Who is Gadwal Vijayalakshmi, Hyderabad Mayor Who Left US Citizenship To Enter Politics". Essel Group (India.com). 11 February 2021. https://www.india.com/news/hyderabad/who-is-gadwal-vijayalakshmi-hyderabad-mayor-trs-ghmc-who-left-us-citizenship-to-enter-politics-4414416/. 
  9. "Meet Hyderabad's First Ever Female Mayor G Vijayalakshmi". India Times. 11 February 2021. https://www.indiatimes.com/news/india/hyderabad-first-ever-female-mayor-g-vijayalakshmi-534101.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்வால்_விசயலட்சுமி&oldid=3688994" இலிருந்து மீள்விக்கப்பட்டது