உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்படுத்தும் தடுக்கிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கையால் கட்டுப்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ்
காற்றியக்கு இயக்கி மூலம் கட்டுப்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ்

கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் (Control valves) என்பது ஒரு வகை அடைப்பிதழ் ஆகும். கட்டுப்பாட்டாளர் கொடுக்கும் மதிப்பிற்கு ஏற்ப அல்லது உணரியிலிருந்து (sensor) பெறப்படும் மதிப்பிற்கு ஏற்ப அடைப்பிதழை மூடியோ, திறந்தோ அல்லது பாதி திறந்தோ வாயு, திரவம் அல்லது நீராவியின் ஒட்டம், அழுத்தம், வெப்பநிலை அல்லது திரவ அளவை கட்டுப்படுத்த உதவும் ஒரு பொறி ஆகும்.[1]

கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் திரவ இயக்கிகள் அல்லது காற்றியக்கு இயக்கிகள் (Pneumatic actuator) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டாளரால் கொடுக்கப்படும் மதிப்புகளுக்கு ஏற்ப இந்த இயக்கிகளில் உள்ள இடம் குறிப்பான் (positioner) செயல்பட்டு கட்டுப்படுத்தும் தடுக்கிதழை இயக்குகிறது.

கட்டுப்படுத்தும் தடுக்கிதழுக்கு மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன.

  • தடுக்கிதழ் இயக்கி (Actuator)
  • தடுக்கிதழ் குறிப்பான் (Positioner)
  • தடுக்கிதழின் உடல் அமைப்பு

சான்றுகள்

[தொகு]
  1. Bela G. Liptak (Editor) (2003). Instrument Engineers' Handbook (4th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1083-0. {{cite book}}: |author= has generic name (help)

வெளியிணைப்புகள்

[தொகு]