உள்ளடக்கத்துக்குச் செல்

அடைப்பிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்த நீர் அடைப்பிதழ்கள் கைப்பிடியால் இயக்கப்படுகின்றன.

ஒரு அடைப்பிதழ் என்பது திரவ வாயுக்கள், நீர்மங்கள், திரவமாக்கப்பட்ட திண்மங்கள் அல்லது குழம்புகள் ஆகியவற்றின் ஓட்டத்தைத் தனது பல்வேறு வழிகளைத் திறப்பது, மூடுவது அல்லது ஓரளவிற்குத் தடுப்பது ஆகியவற்றின் மூலம் சீர்படுத்தும் ஒரு கருவியாகும். அடைப்பிதழ்கள் என்பவை தொழில்நுட்பமுறையில் குழாய் பொருத்துதல்கள் போன்றவையே. ஆயினும், அவை பொதுவாக ஒரு தனிப் பிரிவாகவே கருதப்படுகின்றன. ஒரு திறந்த அடைப்பிதழில், அதிக அழுத்தமுள்ள திசையிலிருந்து குறைந்த அழுத்த திசைக்குத் திரவம் பாய்கிறது.

இதயத்திலுள்ள இருகூர், முக்கூர் அடைப்பிதழ்கள் 7, 12 ஆம் இலக்கங்களால் காட்டப்பட்டுள்ளன

மனித உடலிலும் அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு மனிதனின் இதய அறையில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு இதய அடைப்பிதழ்கள் உள்ளன. அவை இதயத்தில் இரத்தவோட்டம் இயக்கப்படுவதைப் பராமரிக்கிறது.[1][2]

தொழிற்சாலைகள், படைப்பிரிவுகள், வர்த்தகத்துறைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் போன்ற பல்வேறு நிலைகளிலும் அடைப்பிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான அடைப்பிதழ்கள் எண்ணெய் மற்றும் வாயு, மின் உற்பத்தி, சுரங்கம், தண்ணீர் வலைப்பின்னல்கள், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் ரசாயன உற்பத்தி ஆகிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.[சான்று தேவை]

குழல் அமைப்பு அடைப்பிதழ்களில், சூடான மற்றும் குளிர்ச்சியான குழாய் நீருக்கான குழாய்களே மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான அடைப்பிதழ்கள் ஆகும். சமையற் பாத்திரத்தில் (குக்கர்) பயன்படுத்தப்படும் வாயு கட்டுப்பாட்டு ஓரதர்கள், துணிதுவைக்கும் இயந்திரம் மற்றும் பாத்திரத் துலக்கு இயந்திரம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு அடைப்பிதழ்கள் மற்றும் சுடு நீர் அமைப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவையே நமது தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் இதர அடைப்பிதழ்கள் ஆகும்.

ஒரு கைச்சக்கரம், நெம்புகோல் அல்லது மிதி ஆகியவற்றின் மூலம் அடைப்பிதழ்கள் கைகளால் இயக்கப்படலாம். அழுத்தம், வெப்பநிலை அல்லது ஓட்டம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் அடைப்பிதழ்கள் தானியங்கி முறைமையிலும் இயங்கலாம். இந்த மாற்றங்கள் பிரிசுவர் அல்லது உந்துருள் ஆகியவற்றின் மேல் செயல் புரியலாம். இதன் விளைவாக, அவை அடைப்பிதழ்களைச் செயற்படுத்தலாம். இந்த வகையான அடைப்பிதழ்களுக்கு, சுடு நீர் அமைப்புகள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு அடைப்பிதழ்கள் பொதுவாகக் காணப்படும் உதாரணங்கள் ஆகும்.

வெளிப்புற உள்ளீடுகளின் அடிப்படையில் தானியங்கி கட்டுப்பாடு தேவைப்படும் அடைப்பிதழ்களை பயன்படுத்தும் மிகவும் நுணுக்கமான கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு (அதாவது, மாற்று அமைப்பு முனைக்கு குழாய் மூலமாக ஓட்டத்தைச் சீரமைப்பவனவற்றிற்கு) இயக்கி ஒன்று தேவைப்படும். ஒரு அடைப்பிதழின் தருகை மற்றும் அமைப்பைப் பொருத்து, ஒரு இயக்கி அடைப்பிதழைத் தாக்கும். இது அடைப்பிதழை சரியாக நிலைப்படுத்தவும், பல்வேறு கோரிக்கைகளின் மீதான கட்டுப்பாட்டையும் அனுமதிக்கிறது.

பொறி சுழற்சியின் கட்டுப்பாட்டில் பெரும் பங்கு வகிக்கும் அடைப்பிதழ்கள், நெம்புருள் தண்டு, துருத்துருள்கள் அல்லது தள்ளும் தண்டுகள் ஆகியவற்றால் செலுத்தப்படும் ஓட்டோ சுழற்சி (உட்புற உள்ளெரி) பொறிகள் போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

பயன்பாடுகள்

[தொகு]

அடைப்பிதழ்கள் தமது தோற்றம் மற்றும் பயன்பாட்டு முறைமைகளில் பெருமளவு வேறுபடுகின்றன. பொதுவாக, இவற்றின் அளவுகள்[ambiguous] 0.1 மிமீ முதல் 60 செ.மீ (2 அடி) வரை வேறுபடுகின்றன. சிறப்பு அடைப்பிதழ்கள் 5 மீட்டர்களை விஞ்சும் விட்டத்தைக் கொண்டிருக்கலாம்.[which?]

எளிமையான, விலைக் குறைவான மற்றும் ஒரு முறையே பயன்படுத்தப்படக்கூடிய அடைப்பிதழ்களில் துவங்கி, ஆயிரக்கணக்கான யூஎஸ் டாலர்களுக்கு விற்கப்படும் ஒரு அங்குல விட்டச் சிறப்பு அடைப்பிதழ்கள் வரை அடைப்பிதழ்களின் விலை வேறுபடும்.

சிறு-குழாய் இயக்கும் இயந்திரம் மற்றும் முகிற் தகரக்குவளைகள் போன்ற ஒரு முறையே பயன்படக் கூடிய அடைப்பிதழ்கள், பொதுவான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களில் காணப்படலாம்.

வகைகள்

[தொகு]
மிகப் பெரும் பட்டாம்பூச்சி அடைப்பிதழின் உட்புறம் அடைப்பிதழ்கள் பல்வேறானவை மற்றும் பல அடிப்படைகளின் வழி அவற்றை வகைப்படுத்தலாம்.

அடைப்பிதழ்களை அவை செயல்படும் முறையின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

  • நீர்மத்தால் இயங்குபவை
  • காற்றால் இயங்குபவை
  • கைகளால் இயக்கப்படுபவை
  • மின் கம்பிச்சுருள் உருளையால் இயங்குபவை
  • மின்னோடிகளால் இயங்குபவை

அடிப்படை வகைகள்

[தொகு]

அடைப்பிதழ்கள், கீழ்காணும் அடிப்படை வகைகளில் வகைப்படுத்தலாம்.

இரட்டைப் பந்து அடைப்பிதழ்
  • பந்து அடைப்பிதழ், அழுத்த உள்ளக வீழ்ச்சி இல்லாமல் இயக்கவும்/இயக்கத்தை நிறுத்தவும் உதவுகிறது. மேலும் கைகளால் இயக்கப்படும் பல அடைப்பிதழ்களுடன் ஒப்பிடுகையில், இதன் 90º சுற்றானது ஒரு முழுமையான மூடும் கோணத்தை வழங்குவதால் வேகமாக மூடுவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
  • பெரிய குழாய் விட்டங்களில் சீரான ஓட்டத்தை இயக்க பட்டாம்பூச்சி அடைப்பிதழ் பயன்படுத்தப்படுகிறது.
  • துளைகள் அல்லது பொத்தல்கள் உள்ள மற்றொரு உருளையில் இடப்பட்டிருக்கும் ஒரு திண்ம உருளையை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ பயன்படுத்தப்படும் அடைப்பிதழே அடை அடைப்பிதழ் ஆகும். எண்ணெய் மற்றும் வாயுக் கிணறுகளில் காணப்படும் உயர் அழுத்த உள்ளக வீழ்ச்சிக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

File:Gate_valve.JPG|200px|right|thumb|துருப்பிடிக்காத எஃகு கட்டுப்பாட்டு ஓரதர்

  • கட்டுப்பாட்டு ஓரதர் அல்லது ஒரு-வழி அடைப்பிதழானது, திரவம் ஒரு திசையில் மட்டுமே செல்வதை அனுமதிக்கிறது.
ஹாஸ்டிலாய் கட்டுப்பாட்டு ஓரதர்
  • பிரிசுவர் அடைப்பிதழ்களில் சில, சுகாதாரம் சார்ந்த மருந்துப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • பீங்கான் தட்டு அடைப்பிதழ், பெரும்பாலும் உயர் சுழற்சிப் பயன்பாடுகள் அல்லது சிராய்ப்புத் திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது. நான்காம் தர இருக்கைக் கசிவையும் பீங்கான் தட்டுகளால் வழங்க முடியும்.
  • பெரும்பாலும் குறைந்த அழுத்த உள்ளக வீழ்ச்சியுடன் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கு வாயில் அடைப்பிதழ் பயன்படுத்தப்படுகிறது.
துருப்பிடிக்காத எஃகு வாயில் அடைப்பிதழ்
  • நீரோட்டத்தை சீராக இயக்க உருண்டை வடிவ அடைப்பிதழ் சிறந்தது.
  • கத்தி அடைப்பிதழ், குழம்புகள் அல்லது தூள்களின் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கானது.
  • ஊசி அடைப்பிதழ் சீரான ஓட்டக் கட்டுப்பாட்டிற்கானதாகும்.
  • உந்துருள் அடைப்பிதழ், திண்மங்களை குழைமமாகக் கொண்டு செல்லும் திரவங்களின் சீரான இயக்கத்திற்கு உதவும்.
  • இறுக்கி அடைப்பிதழ் என்பது குழம்பு ஓட்டத்தின் சீரான இயக்கத்திற்கானது.
  • சில அழுத்த உள்ளக வீழ்ச்சியுடன் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கு, முளை அடைப்பிதழ் அல்லது மிகச் சிறிய வடிவமுள்ள அடைப்பிதழ் சிறந்தது.
  • நீர்மக் கட்டுப்பாட்டிற்கு சக்கர அடைப்பிதழ் பயன்படும்.
  • வெப்ப விரிவு அடைப்பிதழ் குளிர் சாதனப் பெட்டிகளிலும் வெப்பக்காற்று கட்டுப்பாடு அமைப்புகளிலும் பயன்படும்.
  • கடைசற் பொறியின் தலைப்பு அடைப்பிதழ்

குறிப்பிட்ட வகைகள்

[தொகு]
  • 4-வீச்சு சுழற்சிப் பொறி அடைப்பிதழ்கள்: உந்துருள் அடைப்பிதழின் ஒரு பயன்பாடு
  • ஆஸ்பின் அடைப்பிதழ்: ஒரு பொறியின் உருளை தலையில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு-வடிவத்தினாலான உலோக பாகம்.
  • பந்து அடைப்பான்: இது பெரும்பாலும் நீரளவின் கட்டுப்பாட்டமைப்பில் (சிஸ்டர்ன்) பயன்படுத்தப்படுகிறது.
  • பிப்அடைப்பான்: எளிதில் வளையக்கூடிய குழல்குழாய்க்கு இணைப்பை வழங்குகிறது
  • ஊது அடைப்பிதழ்: கதிர்வீச்சுப் பாதுகாப்பு அறை எனப்படும் ஃபாலவுட் ஷெல்ட்டர் அல்லது கப்பல் எரிபொருள் சேமிப்பறையில் ஏற்படும் வேகமான அதிக அழுத்தத்தைத் தடுக்கிறது.
  • அடைப்பான்: இது சிறு அடைப்பிதழ் அல்லது தடுப்பு அடைப்பான் ஆகியவற்றிற்கு பேச்சு வழக்கிலுள்ள சொல்லாகும்.
  • தேவை அடைப்பிதழ்: இது மூழ்கு சீராக்கத்தில் பயன்படுகிறது.
  • இரட்டைத் தாளத்தட்டு அடைப்பிதழ்
  • இரட்டைக் கட்டுப்பாட்டு ஓரதர்
  • டக்பில் அடைப்பிதழ்
  • ஃப்ளிப்பர் அடைப்பிதழ்
  • ஓட்டக் கட்டுப்பாடு அடைப்பிதழ்: இது அடைப்பிதழின் வழியாகச் சீரான ஓட்டத்தைப் பராமரிக்கும் ஒரு பயன்பாடாகும்.
  • ஹீம்லிச் அடைப்பிதழ்: இது நுரையீரல் உரைக் காற்று நோயை குணப்படுத்த மார்பு வடிக் குழாய்களின் முனையில் பயன்படுத்தப்படும் சிறப்பு ஒரு-வழி அடைப்பிதழாகும்.
  • பாத அடைப்பிதழ்: பின்னோட்டத்தைத் தடுக்க உறிஞ்சு இணைப்பின் கீழே இருக்கும் ஒரு கட்டுப்பாட்டு ஓரதர்.
  • நால்-வழி அடைப்பிதழ்: இருவிதச் செயற்பாட்டு நீராவிப் பொறிகளின் உருளைக்குச் செல்லும் நீராவியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
  • உறை அச்சு/உறை முளை: இவை திரவத்தை உறையவைப்பது அல்லது உருகவைப்பதன் மூலம் அடைப்பிதழாகச் செயல்பட்டு, உறைய வைக்கப்பட்ட பொருளின் முளையை உருவாக்கும் அல்லது நீக்குபவையாகும்.
  • வளிம அழுத்த சீராக்கியானது வாயுவின் ஓட்டம் மற்றும் அழுத்தத்தைச் சீராக இயக்குகிறது
  • இதய அடைப்பிதழ்: பல உயிரினங்களில் இதயத்தின் வழியான இரத்த ஓட்டத்தை சீராக இயக்குகிறது.
  • பட்டை அடைப்பிதழ்: இது, கீலிடப்பட்ட ஒருபுற அடைப்பிதழைக் கொண்டு மூடப்பட்ட, திறப்புடனான சாய்வான தடைகளைக் கொண்டிருக்கும் ஒரு வழி அடைப்பிதழாகும்.
  • முன்னோடி அடைப்பிதழ்: இது ஏனைய அடைப்பிதழ்களுக்கான ஓட்டம் அல்லது அழுத்தத்தைச் சீராக இயக்குகிறது.
  • கடைசற்பொறியின் தலைப்பு அடைப்பிதழ் மற்றும் உறை அடைப்பிதழ்: பொதுவாக, எரிபொருட் கலவை உட்கொள்ளுதல் மற்றும் வெளிக்கொணர்தல் ஆகியவற்றைச் சீராக்க உந்துருள் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • அழுத்த சீராக்கி அல்லது அழுத்த குறைப்பு அடைப்பிதழ் ஆகியவை அடைப்பிதழின் கீழோட்டதிசை அழுத்தத்தை முன்பே அமைக்கப்பட்ட அளவுக்குக் குறைக்கிறது
  • அழுத்தம் தாங்கி அடைப்பிதழ், அல்லது பின்-அழுத்த சீராக்கி ஆகியவை அடைப்பிதழின் எதிரோட்ட திசையின், முன்பே அமைக்கப்பட்ட அளவில் அழுத்தத்தை பராமரிக்கிறது.
  • ப்ரெஸ்டா மற்றும் ஸ்க்ரேடர் அடைப்பிதழ் ஆகியவை மிதிவண்டியின் சக்கரக் கட்டுக்களில் காற்றைப் பிடித்து வைத்திருக்கப் பயன்படுகின்றன.
  • அச்சுக்கோல் அடைப்பிதழ்: இது எளிதில் வளையக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை கொண்டுள்ளது. ஆனால் இதன் உட்பகுதி ஒரு-வழி ஓட்டத்தை அனுமதிக்குமாறு, திறந்திருப்பதால், இது இதய அடைப்பிதழைப் போன்றே உள்ளது.
  • ஸ்க்யூபா மூழ்கு கருவி (தண்ணீரில் மூழ்கி இருக்கும்போது மூச்சு விடப் பயன்படும் கருவி) மற்றும் வாயுவை பயன்படுத்தும் சமையல் கருவிகள் ஆகியவற்றில் உள்ள குறைந்த வேலை பளுவிற்கு, உயர்ந்த அழுத்த வளிம வழங்குதலை குறைக்க, சீராக்கி பயன்படுகிறது.
  • ராக்கர் அடைப்பிதழ்
  • பித்தளைக் கருவிகளின் பாகங்களான சுழலும் அடைப்பிதழ்கள் மற்றும் உந்துருள் அடைப்பிதழ்கள், அவற்றின் புரியிடைத் தொலைவை மாற்றப் பயன்படுகிறது.
  • நொறிவு தட்டு என்பது மிக வேகமான அழுத்தத் தணிவிற்கான அடைப்பிதழ். இதை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் மாற்றி விட வேண்டும். மிகுதியான அழுத்தம் அல்லது வெற்றிடத்திலிருந்து குழாய் அமைப்புகளைப் பாதுகாக்க இது பயன்படுகிறது. காப்பு அடைப்பிதழை விட இது அதிக அளவு நம்பகத்தன்மை கொண்டது.
  • உளி இருக்கை அடைப்பிதழ், அது எங்கே அனுமதிக்கப்படுகிறதோ அந்த இடத்தில், குறைவோட்டத் தேவைக்காக குழாயை மறையிட பயன்படுகிறது.
  • அதிக அழுத்தம் போன்ற ஆபத்தான சூழ்நிலையைச் சரிசெய்ய, அமைக்கப்பட்ட வேறுபாட்டு அழுத்ததில் காப்பு அடைப்பிதழ் அல்லது தணிவு அடைப்பிதழ் தானாகவே இயங்குகிறது.
  • தானியங்கு வண்டியின் சக்கரக் கட்டுகளின் உள்ளே காற்றை பிடித்து வைக்க ஸ்க்ரேடர் அடைப்பிதழ் பயன்படுகிறது.
  • மின் கம்பிச்சுருள் அடைப்பிதழ்: இது மின்சாரம் மூலமாக நீர்மம் அல்லது காற்றியக்கு அடைப்பிதழால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அடைப்பிதழாகும்.
  • நிறுத்த அடைப்பான்: இது ஒரு குழாயின் மூலமாக செல்லும் ஓட்டத்தை தடைசெய்கிறது அல்லது தனிமைப்படுத்துகிறது.
  • சுழலும் அடைப்பிதழ்: பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜோல் தாம்ஸன் அழுத்த குறைப்பு/நீட்டிப்பு அடைப்பிதழ், வளிம-நீர்ம தறுவாய் பிரிப்பை முன்னேற்றுவதற்காக, வெளியேற்றக் கற்றையின் மேலிருக்கும் மைய விலக்கு விசையை அளிக்கிறது.
  • குழாய் (பிரித்தானிய ஆங்கிலம்), திறப்புக் குழாய் (அமெரிக்க ஆங்கிலம்): நீரோட்டத்தைச் சீராக்க வீடுகளில் பயன்படுத்தப்படும் அடைப்பிதழுக்கான பொதுவான பெயர்.
  • குளிர் சாதனப் பெட்டிகளிலும் வெப்பக்காற்று கட்டுப்பாடு அமைப்புகளிலும் பயன்படுத்தப்படும் வெப்ப விரிவு அடைப்பிதழ்.
  • வெப்ப நிலையியல் கலக்கும் அடைப்பிதழ்
  • வெப்ப நிலையியல் கதிர்வீசி அடைப்பிதழ்
  • பொறிக் குழாய்: இவை சில சமயங்களில் பிற வகை அடைப்பிதழ்களைக் கொண்டிருக்கலாம் அல்லது தாமே அடைப்பிதழ்களாகவும் இருக்கலாம்.
  • வெற்றிட நிறுத்தி அடைப்பிதழ்: மாசுபடுத்தப்பட்ட தண்ணீரின் பின்-கவான் குழாய் பயன்பாட்டை அழுத்தப்பட்ட குடிதண்ணீராக்காமல் தடுக்கிறது.

ஆக்கக்கூறுகள்

[தொகு]
அடைப்பிதழ்களுக்கான அடைவளையம்
கைகளால் இயக்கப்படும் எளிமையான பந்து அடைப்பிதழின் பாகங்கள்1) உடற்பகுதி 2) இருக்கை 3) தட்டு 4) நெம்புகோல் 5) தண்டு

அடைவளையங்கள்

[தொகு]

அடைப்பிதழ்களிலிருந்து வாயு அல்லது திரவங்கள் வெளியேறாமல் தடுக்க தடைக்காப்பிணைப்புப் பட்டி அல்லது அடைப்புகள் பயன்படுகின்றன.

உடற்பகுதி மற்றும் கவிகை மூடி (பானெட்)

[தொகு]

உடல் மற்றும் கவிகை மூடி ஆகியவை ஒரு அடைப்பிதழின் முக்கிய பாகங்கள் ஆகும். இந்த இரண்டு பாகங்களும் இணைந்து, அடைப்பிதழின் வழியாகச் செல்லும் திரவத்தை பிடித்துவைத்திருக்கும் உறையை வடிவமைக்கின்றன. கவிகை மூடி என்பது ஒரு உறையாகும். இதன் வழியாகவே தண்டு (கீழே காணவும்) செல்கிறது. இதுவே நடுத்தண்டின் வழிகாட்டியாகவும் மற்றும் தடைக் காப்பிணைப்புப் பட்டியாகவும் செயல்படுகிறது.

அடைப்பிதழின் உடற்பகுதி பொதுவாக உலோகத்தால் ஆனவை.[சான்று தேவை] இவற்றுள் பித்தளை, வெண்கலம், இரும்புஉலோகம், வார்ப்பிரும்பு, எஃகு, கலவை எஃகுகள், துருப்பிடிக்காத எஃகுகள் ஆகியவை பொதுவானவை.[சான்று தேவை] ஓப்பீட்டு அளவில், குறைந்த அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளுக்கு நெகிழி (Plastic) வார்ப்பு உடற் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிவிசி (PVC), பிபி (PP), பிவிடிஎஃப் (PVDF) மற்றும் கண்ணாடியால் வலுவூட்டப்பட்ட நைலான் ஆகியவை அடைப்பிதழ் உடற்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பொதுவான நெகிழிகள் ஆகும்.[சான்று தேவை]

கவிகை மூடி

[தொகு]

கவிகை மூடி யானது அடைப்பிதழ் உடலின் மூடியாகச் செயல்புரிகிறது. பொதுவாக இது அடைப்பிதழின் உடற்பகுதியில் ஓரளவு நிலையான முறையில் திருகப்படுகிறது.அடைப்பிதழை உற்பத்தி செய்யும் போது, இதன் உட்பகுதிகள் உடற்பகுதியின் உள்ளே இடப்படுகின்றன. பின்னர் உள்ளேயிருக்கும் அனைத்தையும் இணைத்துப் பிடித்துக்கொள்ளுமாறு கவிகை மூடி செயற்படுகிறது. இயந்திரத்தைப் பராமரிக்க வேண்டி அடைப்பிதழின் உட்பகுதிகளை அணுகுவதற்காக, இதைப் பயன்படுத்துபவர் கவிகை மூடியை அகற்ற வேண்டும்.பல அடைப்பிதழ்கள் கவிகை மூடிகளைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, முளை அடைப்பிதழ்களில் பொதுவாக கவிகை மூடிகள் கிடையாது.

துறைகள்

[தொகு]

துறைகள் என்பவை அடைப்பிதழின் வழியாக திரவம் செல்வதை அனுமதிக்கும் வழிகளாகும். ஓட்டத்தைக் கட்டுப்படுத்த அடைப்பிதழ் உறுப்பினர் அல்லது தட்டு ஆகியவற்றால் துறைகள் தடைசெய்யப்படுகின்றன. அடைப்பிதழ்களில் பொதுவாக இரண்டு துறைகள் இருக்கும். எனினும் அவற்றில் பல, 20 துறைகள் வரை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் அடைப்பிதழ்கள் அதன் துறைகளில் குழாய்களுடனோ அல்லது மற்ற கருவிகளுடனோ இணைக்கப்பட்டுள்ளன. மரையிடுதல்கள், அமுக்கமூட்டு பொருத்துதல்கள், பசை, சிமிட்டி, விளிம்புப் பட்டைகள் அல்லது பற்றுவைத்தல் ஆகியவை இணைப்பு முறைகளில் அடங்கும்.

தட்டுகள்

[தொகு]
அடைப்பிதழ் தட்டு

ஒரு தட்டு அல்லது அடைப்பிதழ் உறுப்பினர் என்பது நிலையான உடற்பகுதியின் உள்ளே இருக்கும் நகரும் தடையாகும். இது அடைப்பிதழ் வழியே செல்லும் ஓட்டத்தை சீராகக் கட்டுப்படுத்துகிறது. இது பாரம்பரியமாக தட்டு-வடிவத்தில் இருந்தாலும், தட்டுக்கள் பல வடிவங்களிலும் வருகின்றன. ஒரு பந்து என்பது அதன் வழியே செல்லும் துறைகளுக்கு இடையே இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளைக் கொண்டுள்ள ஒரு வட்ட அடைப்பிதழ் உறுப்பினராகும். பந்தைச் சுற்றுவதன் மூலம் பல்வேறு துறைகளுக்கு இடையே ஓட்டம் செலுத்தப்படலாம். பந்து அடைப்பிதழ்கள் திரவப் பாதையாக துளையிடப்பட்டுள்ள உருளைத் துளையுடனான கோள வடிவ சுற்றகங்களைப் பயன்படுத்துகின்றன. முளை அடைப்பிதழ்கள், முளைகள் என அழைக்கப்படும் உருளை அல்லது கூம்புவடிவ சரிவு சுற்றகத்தைப் பயன்படுத்துகின்றன.[ambiguous] அடைப்பிதழின் உடற்பகுதியின் உள்ளே சுற்றகத்தை திருப்ப இயலும்வரை, சுற்றகங்கள் மட்டுமல்லாமல் சுற்றக அடைப்பிதழ்கள் ஆகியவற்றிலும் மற்ற வட்ட வடிவங்கள் சாத்தியமானவையே. இருப்பினும், அனைத்து வட்ட அல்லது கோள வடிவ தட்டுக்களும் சுற்றகங்கள் அல்ல. உதாரணமாக, ஒரு பந்து கட்டுப்பாட்டு ஓரதர் பின்னெதிர் ஓட்டத்தைத் தடைசெய்ய பந்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், அது சுற்றகம் அல்ல; ஏனெனில் அடைப்பிதழை இயக்கும் செயலானது பந்தைச் சுற்றும் பணியை உள்ளடக்கியிருப்பதில்லை.

இருக்கை

[தொகு]

இருக்கை என்பது கசிவற்ற தடைக்காப்பு இணைப்புப் பட்டியை உருவாக்கத் தட்டுகளை தொடர்பு கொள்ளும் உடற்பகுதியின் உட்புறப் பரப்பாகும். நீள்வாக்கில் நகரும் அல்லது கீலில் ஆடும் தட்டுக்களில், அடைப்பிதழ் நிறுத்தப்பட்டிருக்கும்போது மட்டுமே, இருக்கையுடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு வருகிறது. சுற்றும் தட்டுக்களில், இருக்கை எப்போதுமே தட்டுடன் தொடர்புகொள்ளும் நிலையிலேயே உள்ளது. ஆனால், தட்டு திருப்பப்படும்போது தொடர்பு கொள்ளும் பகுதி மாறுகிறது. இருக்கை எப்போதுமே உடற்பகுதியுடன் தழுவல் நிலையில் அசைவற்றே உள்ளது.

அடிப்படையாக, உடற்பகுதியிலிருந்து நேரடியாக செய்யப்பட்டுள்ளனவா அல்லது வேறு பொருளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளனவா என்பதைப் பொருத்தே இருக்கைகள் வகைப்படுத்தப்படுகின்றன.

  • அடைப்பிதழின் உடற்பகுதிக்கும் கடின இருக்கைகள் மிகவும் அவசியமானதாகிறது. கடின இருக்கைகள் உடைய எல்லா உலோக அடைப்பிதழ்களிலும் சிறிதளவாவது கசிவு இருக்கும்.
  • மென் இருக்கைகள் அடைப்பிதழின் உடற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அதிகபட்ச இயக்க வெப்பநிலையைப் பொறுத்து பிடிஎஃப்இ (PTFE) போன்ற மென்மையான பொருட்கள் அல்லது என்பிஆர் (NBR), இபிடிஎம் (EPDM), அல்லது எஃப்கேஎம் (FKM) போன்ற பலவகையான நீட்டிழுவைகள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகின்றன.
டாஸ்மேனியா, கோர்டான் மின் உற்பத்தி நிலையத்தில் இருக்கும் ஃப்ரான்சிஸ் டர்பைனுக்கான மூடு நுட்பம் கொண்ட பட்டாம்பூச்சி அடைப்பிதழ்
பந்து அடைப்பிதழ்

ஒரு மூடிய மென் இருக்கையை உடைய அடைப்பிதழில் மூடியிருக்கும் போது கசிவிற்கான உத்தரவாதம் மிகவும் குறைவாகவே உள்ளது; ஆயினும், கடின இருக்கைகளைக் கொண்ட அடைப்பிதழ்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. பொதுவாக, வாயில் மற்றும் உருண்டை வடிவ அடைப்பிதழ்கள் மற்றும் கட்டுப்பாட்டு ஓரதர்கள் கடினமான இருக்கைகளை கொண்டுள்ளன. ஆனால் பட்டாம்பூச்சி, பந்து, முளை மற்றும் பிரிசுவர் அடைப்பிதழ்கள் மென் இருக்கைகளைக் கொண்டுள்ளன.

தண்டு

[தொகு]

தண்டு , கட்டுப்பாட்டு கருவியிலிருந்து தட்டுக்கு இயக்கத்தை செலுத்துகிறது. பொதுவாக நடுத்தண்டானது கவிகை மூடியின் வழியாகவே செல்கிறது. சில தறுவாய்களில், தண்டு மற்றும் தட்டு ஆகியவை அல்லது தண்டு மற்றும் கைப்பிடி ஆகியவை ஒரு துண்டிலேயே இணைக்கப்படலாம்.

தண்டினால் செலுத்தப்பட்ட இயக்கம் நேரியல் செயல்திறம், சுழற்சி முறுக்கம் அல்லது இவைகளின் சிலப் பிணைப்பாக இருக்கலாம். தட்டைப் பின்னோக்கியோ அல்லது முன்னோக்கியோ உடற்பகுதியின் உள்ளே செலுத்த ஏதுவாக அதை ஏதாவது ஒரு திசையில் திருப்புவதன் மூலம் அடைப்பிதழின் உள்ளே அல்லது வெளியே திருகப்படுமாறு அடைப்பிதழும் தண்டும் மரையிடப் படலாம்[ambiguous] தடைக்காப்பு இணைப்புப் பட்டியைப் பராமரிக்க தண்டு மற்றும் கவிகை மூடிக்கு இடையே பெரும்பாலும் அடைப்பு பயன்படுகிறது. பெரும்பாலான கட்டுப்பாட்டு ஓரதர்களில் இருப்பது போல் சில அடைப்பிதழ்களில் வெளிக் கட்டுப்பாடு இருப்பதில்லை. மேலும் இவைகளுக்குத் தண்டு தேவைப்படாது.

இருக்கை மற்றும் தண்டிற்கு இடையே தட்டு இருக்கும் அடைப்பிதழ்கள் மற்றும் அடைப்பிதழை நிறுத்த அதை நோக்கித் தண்டு செல்லுமாயின் அவை சாதாரண-இருக்கை அல்லது முன் இருக்கை அடைப்பிதழ்களாகும். தட்டு மற்றும் தண்டிற்கு இடையே இருக்கை இருக்கும் அடைப்பிதழ்கள் மற்றும் அடைப்பிதழை நிறுத்த அதன் எதிர் திசையை நோக்கி தண்டு செல்லுமானால் அவை பின்னெதிர்- இருக்கை அல்லது பின்னிருக்கை அடைப்பிதழ்களாகும். தண்டுகள் அற்ற அடைப்பிதழ்கள் அல்லது சுற்றகங்களை பயன்படுத்தும் அடைப்பிதழ்களுக்கு இந்தச் சொற்கள் பொருந்தா.

இன்கொனல் எக்ஸ்750 வில் (ஸ்பிரிங்)

அடைப்பிதழ் பந்துகள்

[தொகு]

ஒரு அடைப்பிதழ் பந்தானது, மிக அதிக பளு, உயர் அழுத்தம், உயர்-அளவு பழுபொறுதி ஆகிய பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

பெரும்பாலும் இவை துருப்பிடிக்காத எஃகு, டைட்டானியம், ஸ்டெல்லைட், ஹாஸ்டிலாய், பித்தளை, அல்லது நிக்கல் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. ஏபிஎஸ், பிவிசி, பிபி அல்லது பிவிடிஎஃப் போன்ற பலவகையான நெகிழிகளாலும் இவை செய்யப்படலாம்.

வில்

[தொகு]

பல அடைப்பிதழ்கள், தட்டை ஏதாவது ஒரு நிலைக்கு தானாகவே மாற்ற வில்-ஏற்றத்திற்கு தேவையான வில்லினைக் கொண்டுள்ளன. ஆனால் தட்டை மீண்டும் அதே நிலையில் வைப்பதற்கான கட்டுப்பாட்டையும் இது அனுமதிக்கிறது. பொதுவாக தணிவு அடைப்பிதழ்கள், அடைப்பிதழை நிறுத்திவைக்க வில்லைப் பயன்படுத்திடினும், வில்-ஏற்றத்திற்கு எதிராக அடைப்பிதழை திறக்கத் தேவையான அதிகப்படியான அழுத்தத்தை அனுமதிக்கின்றன. பொதுவாக சுருள் வில்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனிச்சிறப்பான வில் பொருட்களில், துத்தநாக முலாம் பூசப்பட்ட எஃகு, துருப்பிடிக்காத எஃகு ஆகியவைகளும், உயர் வெப்பநிலைப் பயன்பாடுகளுக்கு இன்கொனல் எக்ஸ்750 போன்றவையும் அடங்கும்.

அடைப்பிதழ் செயற்பாட்டு நிலைகள்

[தொகு]
கடல்சார் டீசல் பொறியில், கடல் நீரைக் குளிர்விப்பதற்காக கடலில் பயன்படுத்தப்படும் ஒரு குழாய்

அடைப்பிதழ் நிலைகள் என்பவை அடைப்பிதழில் உள்ள தட்டு அல்லது சுற்றகத்தின் நிலையால் தீர்மானிக்கப்படும் செயற்பாட்டு நிலைகளாகும். சில அடைப்பிதழ்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளுக்கு இடையே படிப்படியான மாற்றத்தில் இயக்கப்படலாம். திரும்பு அடைப்பிதழ்கள் மற்றும் ஒரு-வழி அடைப்பிதழ்கள் ஆகியவை முறையே இரண்டு அல்லது ஒரு திசையில் செல்ல திரவத்தை அனுமதிக்கிறது.

இரு-துறை அடைப்பிதழ்கள்

[தொகு]

இரு-துறை அடைப்பிதழ்களுக்கான இயக்க நிலைகள் அதன் வழியாக ஓட்டம் செல்லாமல் இருக்க மூடியிருக்கலாம் அல்லது அதிகபட்ச ஓட்டத்திற்கு முழுமையாக திறந்திருக்கலாம் அல்லது சில சமயங்களில் இந்த இரண்டிற்கும் இடையிலான எந்த ஒரு அளவையிலும் பகுதியாகத் திறந்திருக்கலாம். பல அடைப்பிதழ்கள், இவற்றுக்கு இடையே உள்ள ஓட்ட நிலையை கட்டுப்படுத்துவதற்காக துல்லியமான வடிவமைப்பு பெற்றிருப்பதில்லை. இவ்வாறான அடைப்பிதழ்கள் ஒன்று திறந்திருப்பதாகவோ அல்லது மூடியிருப்பதாகவோ கருதப்படுகின்றன. வேறுபடும் ஓட்டத்தின் அளவுகளைச் சீரமைப்பதற்காக சில அடைப்பிதழ்கள் சிறப்பான முறையில் வடிவமைக்கப் படுகின்றன. இத்தகைய அடைப்பிதழ்கள், சீராக்கம் , முறுக்குதல் , அளவிடல் அல்லது ஊசி அடைப்பிதழ்கள் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, சீரான ஓட்ட கட்டுப்பாட்டிற்கு தேவையான நீண்ட கூம்பு-வடிவ தட்டுக்கள் மற்றும் அதனுடன் ஒத்துப்போகும் இருக்கைகள் ஆகியவற்றை ஊசி அடைப்பிதழ்கள் கொண்டுள்ளன. சில அடைப்பிதழ்களில், அந்த அடைப்பிதழ் எவ்வளவு திறந்திருக்கிறது என்பதை உணர்த்த இயக்க அமைப்பு இருக்கலாம். ஆனால் மேலும் பலவற்றில் தனி ஓட்ட அளவிகள் போன்ற ஓட்ட விகிதத்தின் மற்ற அறிகுறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

திரவ அமைப்புகள் கொண்டுள்ள[ambiguous] சில தொழிற்சாலைகளில்[ambiguous], வழக்கமான இயக்கத்தின்போது சாதாரணமாக மூடுவது அல்லது திறப்பது போன்ற பணிகளுக்கு சில இரு-வழி அடைப்பிதழ்கள நியமிக்கப்படலாம். பொதுவான தடுத்து நிறுத்தும் அடைப்பிதழ்களின் உதாரணங்களாக, மாதிரியை எடுக்கும்போது மட்டுமே திறக்கப்படுவதான மாதிரி எடுக்கும் அடைப்பிதழ்களைக் கூறலாம். பொதுவான திறந்த அடைப்பிதழ்களின் உதாரணங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்பிதழ்கள் ஆகும். பொதுவாக இவை திரவ அமைப்பின் ஒரு அலகு அல்லது ஒரு பகுதியில் கசிவு போன்ற பிரச்சினை இருக்கும்போது மட்டுமே, அமைப்பின் பிற பகுதிகளைப் பாதிக்காத வண்ணம், அந்தப் பிரச்சினையைப் தனிமைப்படுத்துவதற்காக மூடப்படுகின்றன.

இரு துறைகளுக்கு இடையே ஓட்டம் எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லுமாறு பல இரு-வழி அடைப்பிதழ்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டில் ஒரு அடைப்பிதழ் இடப்பட்டிருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் அடைப்பிதழின் எதிரோட்ட திசை யிலிருந்து மற்றொரு துறையில் இருக்கும் அடைப்பிதழின் கீழோட்ட திசை க்கு ஓட்டம் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயன்ற வகையில், சில வகையான கீழோட்ட அழுத்தத்தை உருவாக்க ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் அடைப்பிதழ்களின் மாறுபாடுகள் அழுத்த சீராக்கிகள் ஆகும். இவை, பெரும்பாலும் வாயு உருளையிலிருந்து வாயுவின் ஓட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எதிரோட்ட திசை அழுத்தத்தைப் பராமரிக்க இயன்ற வகையில் ஓட்டம் கட்டுப்படுத்தப்படும் அடைப்பிதழின் மாறுபாடே பின்-அழுத்த சீராக்கியாகும்.

முத்துறை அடைப்பிதழ்கள்

[தொகு]

மூன்று துறைகளைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை இடைப்பட்ட நிலையிலேயே உருவாக்கப்படுகின்றன. முத்துறை அடைப்பிதழ்கள் பெரும்பாலும் பந்து அல்லது சுற்றக அடைப்பிதழ்களாகவே உள்ளன. பல திறப்புக் குழாய்களிலிருந்து வெளிவரும் நீரை, விரும்பும் வெப்ப நிலையில் பெறுவதற்கு, உள்வரும் குளிர்ந்த அல்லது சுடு நீரை மாறுபட்ட அளவைகளில் சீரமைக்கலாம்

"மின்னோடி அடைப்பிதழ்" என்பதானது மூன்று வழி அடைப்பிதழ் பயன்பாட்டின் வழியாக வீட்டு வெப்ப அமைப்பின் தேவைக்கேற்றவாறு, கதிர் வீசிகளுக்கு செல்வதும் மற்றும் சுடு நீர் அமைப்பிற்குச் செல்வதுமான இரண்டு வெளிச்செல் குழாய்களுக்குச் செல்லும் ஓட்டத்தின் விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. கலவை இயக்கிகள் மற்றும் எண்ணிலக்க நிலைப்படுத்திகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்கும் அடைப்பிதழ்களில்

நாற்துறை அடைப்பிதழ்கள்

[தொகு]

நான்கு துறைகளை உடைய உடற்பகுதியை கொண்ட அடைப்பிதழே ஒரு நாற்துறை அடைப்பிதழாகும். இதன் உடற்பகுதியைச் சுற்றி நான்கு துறைகளும் சமமான இடை வெளியில் அமைக்கப்பட்டிருக்கின்றன; மேலும் அருகிலுள்ள துறைகளை இணைப்பதற்கென இரண்டு பாதைகளை தட்டுகள் கொண்டுள்ளன. இது இரண்டு நிலைகளாக இயக்கப்படுகிறது.

சம நேரத்திலேயே, அழுத்தக் கட்டுப்பாடு கொண்ட நீர் இணைப்பில் நிறுவப்பட்டிருக்கும் மாதிரி எடுக்கும் உருளையைத் தனிமைப்படுத்தவும் மற்றும் புறக்கணிக்கவும், இந்த நாற்துறை அடைப்பிதழ்கள் பயன்படுகின்றன. நீர்ம அமைப்பின் அழுத்தத்தைப் பாதிக்காமல் திரவ மாதிரியை எடுக்கவும், வளிம நீக்கத்தைத் (கசிவற்ற, வாயு இழப்பு அல்லாத அல்லது காற்று நுழைதல், வெளிப்புற மாசற்ற) தவிர்க்கவும் இது பயன்படுகிறது.

கட்டுப்பாடு

[தொகு]
ஒரு கப்பலோட்டி எரிபொருள் அடைப்பிதழை கட்டுப்படுத்துவதன் மூலம் கப்பலின் தளத்தில் சக்கரத்தை இயக்குகிறார்.

பல அடைப்பிதழ்கள், தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைப்பிடியின் மூலம் கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கைப்பிடியானது இயங்கும் நிலைகளுக்கு இடையே 90 அளவையில் திருப்பப்பட்டால், அந்த அடைப்பிதழ் கால் பங்கு-திரும்பும் அடைப்பிதழ் என அழைக்கப்படுகிறது. பட்டாம்பூச்சி, பந்து அடைப்பிதழ்கள் மற்றும் முளை அடைப்பிதழ்கள் ஆகியவை பெரும்பாலும் கால் பங்கு-திரும்பும் அடைப்பிதழ்கள் ஆகும். தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இயக்கிகளினாலும் அடைப்பிதழ்கள் கட்டுப்படுத்தப்படலாம். அவை மின்னோடி அல்லது மின்கம்பிச் சுருள் உருளையை போன்று மின் எந்திர இயக்கிகளாகவோ, காற்று அழுத்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் காற்றியக்கு இயக்கிகளாகவோ அல்லது எண்ணெய் அல்லது நீர் போன்ற நீர்மத்தின் அழுத்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் நீர்ம இயக்கிகளாகவோ இருக்கலாம்.

அடைப்பிதழ் மிகவும் பெரிய அளவினதாக இருக்கும்போது கையால் இயக்கப்படும் கட்டுப்பாடு மிகவும் கடினமானதாக அமைவதால், துணி துவைக்கும் இயந்திர சுழற்றிகளில் உள்ளது போன்ற தானியங்கிக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்து அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ளது போன்ற தொலைவு கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இயக்கிகள் பயன்படுத்தப்படலாம். காற்றியக்கு இயக்கிகள் மற்றும் நீர்ம இயக்கிகள் ஆகியவற்றிற்கு நுழைவாய் இணைப்பு மற்றும் வெளிச்செல் வாய் இணைப்பை இயக்கிகளுக்கு வழங்க, அழுத்தப்பட்ட காற்று அல்லது நீர்ம இணைப்புகள் தேவைப்படுகின்றன. மற்ற அடைப்பிதழ்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் அடைப்பிதழ்கள் முன்னோடி அடைப்பிதழ்கள் ஆகும். இயக்கிகளுக்கு செல்லும் காற்று அல்லது நீர்மத்தை வழங்குவதை, இயக்கி இணைப்புகளில் உள்ள முன்னோடி அடைப்பிதழ்கள் கட்டுப்படுத்துகின்றன.

ஒரு கழிப்பறை நீர்த் தொட்டியில் இருக்கும் துருவல் அடைப்பிதழ் நீர்ம அளவு-இயக்கி அடைப்பிதழ் ஆகும். இந்த அமைப்பில் நீர் அதிக அளவை அடையும்போது, தொட்டியை நிரப்பும் இயக்கமுறையானது அடைப்பிதழை மூடுகிறது.

சில அடைப்பிதழ் வடிவமைப்புகளில், திரவ ஓட்டத்தின் அழுத்தம் தானாகவோ அல்லது துறைகளின் இடையே உள்ள திரவ ஓட்டத்தின் அழுத்தத்தில் உள்ள வேறுபாட்டினாலோ தானியங்கியாக அடைப்பிதழின் வழியே செல்லும் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

இதர கருத்தாராய்வுகள்

[தொகு]

அடைப்பிதழ்களின் விலையானது அதன் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக அடைப்பிதழ்களில் இருக்கும் ஈரப் பொருட்களும் அடையாளம் காணப்படுகின்றன. மிக அதிக அழுத்தமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில அடைப்பிதழ்களும் கிடைக்கப்பெறுகின்றன. ஒரு வடிவமைப்பாளரோ, பொறியியலாளரோ அல்லது பயனரோ ஒரு பயன்பாட்டிற்காக ஒரு அடைப்பிதழை பயன்படுத்த முடிவு செய்தால், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை அது மிஞ்சவில்லை என்பதையும் அடைப்பிதழ் உட்புறத்தில் திறந்துவிடப்பட்டிருக்கும் திரவத்துடன் ஈரப் பொருட்கள் ஒத்து இருக்கிறதா என்பதையும் அவர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

குறிப்பாக, இரசாயனம் அல்லது மின் உற்பத்தித் தொழிற்சாலையில் இருக்கும் சில திரவ அமைப்பு வடிவங்கள், குழாயிடுதல் மற்றும் கருவிகள் பற்றிய விளக்க வரைபடங்களில், தெளிவான முறையில் விவரிக்கப்படுகின்றன. இது போன்ற விளக்க வரைபடங்களில், பல்வேறு அடைப்பிதழ்களும் குறிப்பிட்ட சின்னங்களின் மூலம் விவரிக்கப்படுகின்றன.

நல்ல நிலையிலான அடைப்பிதழ்கள் கசிவில்லாமல் இருத்தல் வேண்டும். இருப்பினும், இறுதியில் அடைப்பிதழ்கள் பயன்பாடற்றுத் தேய்மானமடைந்து, அடைப்பிதழின் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் இடையேயோ அல்லது ஓட்டத்தை நிறுத்துவதற்காக அடைப்பிதழ் மூடப்படும் போது தட்டு மற்றும் இருக்கைக்கு இடையேயோ கசிவு ஏற்படலாம். இருக்கை மற்றும் தட்டுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் ஒரு சிறு துண்டு கூட இவ்வாறான கசிவை உருவாக்கலாம்.

உருவப்படங்கள்

[தொகு]

தகவல் குறிப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Types of valve bodies and their specifications - Actuation Valves". www.actuation.co.uk.
  2. "European Commission Pressure Equipment Directive (PED)". Archived from the original on 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2010-09-13.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valves
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைப்பிதழ்&oldid=3924480" இலிருந்து மீள்விக்கப்பட்டது