கட்டற்ற சிந்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டற்ற சிந்தனை, சுயசிந்தனை அல்லது தற்சிந்தனை (Freethought) என்பது அதிகாரம், பாரம்பரியம், ஏனைய கொள்கைகளிலிருந்து அல்லாமல் ஏரணம், காரணம், அனுபவவியல் ஆகியவற்றின் அடைப்படையில் அமைந்த மெய்யியல் நோக்கு நிலையாகும்.[1][2][3] கட்டற்ற சிந்தனைவாத அறிதிறன் செயற்பாடு "சுயசிந்தனை" எனவும் அதனைச் செய்பவர்கள் "சுயசிந்தனையார்கள்" எனவும் அழைக்கப்படுவர்.[1][4]

கட்டற்ற சிந்தனையின் அடையாளமாக பன்சி மலர்.

கட்டற்ற சிந்தனை உண்மை போன்று தோற்றமளிக்கும் சிந்தனைகளை அறிவு, காரணம் என்பவற்றின் உதவியின்றி ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறது. ஆகையால், கட்டற்ற சிந்தனையார்கள் அவர்களின் கருத்துக்களை காரணி, அறிவியல் அறிவு வழி, ஏரண அடிப்படைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்ட வேண்டும். மாறாக, சுதந்திரமான ஏரண தவறான வாதங்கள், அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் அதிகாரத் தாக்கங்கள், ஒருபக்கச் சார்பு உறுதிப்படுத்தல், ஒருபக்கச் சார்பு அறிதிறன், மரபு ஞானம், பரவலர் பண்பாடு, முன்முடிவு, அபிமானம், பாரம்பரியம், உள்ளூர்க் கதைகள் மற்றும் ஏனைய கொள்கைகளின் அடைப்படையில் அமையக்கூடாது. சமயம் பற்றிய கட்டற்ற சிந்தனையின்படி, இயற்கையை மீறிய (மீஇயற்கை) இருப்பு என்று இருப்பதற்கு போதியளவு ஆதாரம் இல்லை என்கின்றது.[5]

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_சிந்தனை&oldid=2223286" இலிருந்து மீள்விக்கப்பட்டது