தன்விருப்புக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தன்விருப்புக் கொள்கை அல்லது தன்விருப்புரிமை எண்ணம் (Free will) என்பது ஒவ்வொரு மனிதனும் என்ன செய்யவேண்டும் என்பதைக் கட்டற்ற முறையில் தானே துணிய முடியும் எனும் மெய்யியல் கோட்பாடு ஆகும். இது, அனைத்தும் ஏற்னவே முடிவு செய்யப்பட்டது என்னும் இயற்கை முடிவுக் கொள்கைக்கு (determinism) எதிர்மாறானது.

ஒன்றைச் செய்வதையோ அல்லது செய்யாமல் இருப்பதையோ முடிவு செய்யத் தம்மால் முடியும் எனச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் பல விடயங்கள் இதற்கு மாறாக நடப்பதையும் பார்க்கலாம். அதே வேளை இறையியல் கூறுவதுபோல், இறைவனே மனிதனைப் படைத்தான் என்றும் அவனே மனிதரைக் கட்டுப்படுத்துகிறான் என்றும் கொள்வதாயின் மனிதச் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. எனவே தன்விருப்புக் கொள்கை சமயம், ஒழுக்கம், அறிவியல் என்பன சார்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்விருப்புக்_கொள்கை&oldid=1869175" இருந்து மீள்விக்கப்பட்டது