கட்டமைப்புச் சுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டமைப்புச் சுமை (Structural loads) அல்லது வினைகள் (actions) என்பன ஓர் கட்டமைப்புக்கு அல்லது கட்டமைப்புக் கூறுகளுக்கு கொடுக்கப்படும் விசைகள், உருமாற்றங்கள் அல்லது முடுக்கங்கள் ஆகும்.[1][2]

இந்தச் சுமைகள் கட்டமைப்பில் தகைவுகள், உருமாற்றங்கள், மற்றும் இடப்பெயர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. இவற்றின் விளைவுகளைக் குறித்த மதிப்பீடு கட்டமைப்புப் பகுப்பாய்வு முறைமைகளின் மூலம் பெறப்படுகின்றன. கூடுதலான சுமை அல்லது அளவிற்கதிகமான சுமை கட்டமைப்புத் தவறுதலுக்கு வழிகோலுமாகையால் ஒரு கட்டமைப்பை வடிவமைக்கும்போது இவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும் இயக்கத்தின்போது இவை கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

வான்வெளி ஊர்திகள், கடல்வழி கலங்கள் மற்றும் சரக்காளும் இயந்திரங்கள் போன்ற இயந்திர கட்டமைப்புகள் தங்களுக்கெனத் தனிப்பட்ட கட்டமைப்புச் சுமைகளையும் விசைகளையும் கொண்டுள்ளன.[3]

பொறியாளர்கள் பொதுவாக பதிப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள், உடன்பாடுகள், அல்லது வரையறுக்கப்பட்ட விவரக் கூற்றுகளின் அடிப்படையில் கட்டமைப்புச் சுமையை கணக்கிடுகிறார்கள். ஏற்புச் சோதனைக்கும் ஆய்வுகளுக்கும் ஏற்கப்பட்ட தொழில்நுட்பச் சீர்தரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. ASCE/SEI 7-05 Minimum Design Loads for Buildings and Other Structures. American Society of Civil Engineers. 2006. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7844-0809-2.
  2. "1.5.3.1". Eurocode 0: Basis of structural design EN 1990. Bruxelles: European Committee for Standarization. 2002.
  3. Avallone, E.A., and Baumeister, T. (ed.). Mark's Standard Handbook for Mechanical Engineers (10th ed.). McGraw-Hill. pp. 11–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-004997-1.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டமைப்புச்_சுமை&oldid=3237849" இலிருந்து மீள்விக்கப்பட்டது