கட்சிக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்சிக்காரன்
Katchikkaaran
இயக்கம்பி. அய்யப்பன்
தயாரிப்புவிஜித் சரவணன்
இசைசி.எம்.மகேந்திரா
நடிப்பு
ஒளிப்பதிவுமதன்குமார்
கலையகம்பி.எசு.கே. தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுதிசம்பர் 16, 2022 (2022-12-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கட்சிக்காரன் (Katchikkaaran) பி. ஐயப்பன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். விஜித் சரவணன், சுவேதா டோரதி மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 16 அன்று இத்திரைப்படம் [1] வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

  • விஜித் சரவணன்
  • அஞ்சலியாக சுவேதா டோரதி
  • அப்புக்குட்டி
  • சிவசேனாதிபதி
  • ஏ.ஆர்.தெனாலி
  • மருது பாண்டியன்
  • ஜவகர்
  • விஜய் கௌதம்
  • சி.என்.பிரபாகரன்
  • வின்சென்ட் ராய்

தயாரிப்பு[தொகு]

தோனி கபடி குழுவு திரைப்படத்திற்குப் (2018) பிறகு ஐயப்பன் இயக்கும் இரண்டாவது முயற்சியாக இப்படம் அமைந்தது. படத்தின் தயாரிப்பாளர் விஜித் சரவணனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]

திரைப்படம் வெளியிடுவதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு திசம்பரில் படத்தின் ஒலிப்பதிவு வெளியீட்டைக் குறிக்கும் நிகழ்வு ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கே.ராசனுக்கும் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே பகிரங்கமாக வாக்குவாதம் ஏற்பட்டது.[3][4]

வரவேற்பு[தொகு]

கட்சிக்காரன் திரைப்படம் 16 டிசம்பர் 2022 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. மாலை மலரைச் சேர்ந்த ஒரு விமர்சகர் படத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 2.25 மதிப்பெண்களைக் கொடுத்தார், மேலும் படம் "சுவாரஸ்யமற்றது" என்றும் முத்திரை குத்தினார்.[5] தினத்தந்தி மற்றும் தினமலரின் விமர்சகர்களும் படத்திற்கு சாதகமற்ற விமர்சனத்தையே அளித்தனர்.[6][7] கட்சிக்காரன் ஒரு சிறிய முதலீட்டுத் திரைப்படமென்றாலும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று திரைப்பட விமர்சகர் மாலினி மன்னாத் எழுதினார். இதன் நடிகர்கள் அல்லது தொழில்நுட்பக் குழுவில் பெருமைப்படுவதற்குரிய பிரபலமானவர்களின் பெயர்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Katchikaaran Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes" – via timesofindia.indiatimes.com.
  2. 2.0 2.1 "Review- Katchikkaran". 17 December 2022."Review- Katchikkaran". 17 December 2022.
  3. Desk, Online. "Heated argument between K Rajan & Bayilvan Ranganathan". DT next.
  4. "??அப்படி கேட்பேன்னு நினைச்சியாடா.... K Rajan Exclusive After Fight | Katchikaaran Movie | Bayilvan - Raaga.com - A World Of Music". www.raaga.com.
  5. "Katchikaran". www.maalaimalar.com. 16 December 2022.
  6. "கட்சிக்காரன்: சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. 17 December 2022.
  7. "கட்சிக்காரன்". Dinamalar.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சிக்காரன்&oldid=3834233" இலிருந்து மீள்விக்கப்பட்டது