கடோலினியம் ஈரயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடோலினியம் ஈரயோடைடு
Gadolinium diiodide
இனங்காட்டிகள்
13814-72-7 Y
InChI
  • InChI=1S/Gd.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: DOUOICPRZGCJLL-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 157871709
SMILES
  • [I-].[I-].[Gd+2]
பண்புகள்
GdI2
வாய்ப்பாட்டு எடை 411.06 g·mol−1
தோற்றம் வெண்கல திண்ம்மம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கடோலினியம் ஈரயோடைடு (Gadolinium diiodide) GdI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[2] இது Gd3+(I)2e என்ற அயனி வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு படிக அயனி உப்பாகும். படிக அயனி உப்பில் எலக்ட்ரான்கள் எதிர்மின் அயனிகளாகச் செயல்படும் என்பதால் இது உண்மையான காடோலினியம்(II) சேர்மமாக கருதப்படுவதில்லை. 7.3 பி என்ற செறிவூட்டல் காந்தமாக்கலுடன் 276 கெல்வின் வெப்பநிலையில் கடோலினியம் ஈரயோடைடு நிறைவுற்ற பெரோ காந்தமாக உள்ளது. அறை வெப்பநிலைக்கு அருகில் 7 டி அளவில் ஒரு பெரிய எதிர்மறை காந்த எதிர்ப்புத் தன்மையை (~70%) இச்சேர்மம் வெளிப்படுத்துகிறது.[3] அதிக வெப்பநிலையில் கடோலினியம் மற்றும் காடோலினியம்(III) அயோடைடை வினைபுரியச் செய்வதன் மூலம் இதை தயாரிக்கலாம்.

Gd + 2 GdI3 → 3 GdI2

கடோலினியம் ஈரயோடைடு அதிக வெப்பநிலையில் (800 °செல்சியசு) ஐதரசனுடன் வினைபுரிந்து கடோலினியம் ஐதரசன் அயோடைடு என்ற சேர்மத்தை உருவாக்க்குகிறது.(GdI2H0.97[4]).[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, William M. (2012). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Fla.: CRC. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4. இணையக் கணினி நூலக மைய எண் 793213751.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1240–1242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. K Ahn, C Felser, R Seshadri, R.K Kremer, A Simon (May 2000). "Giant negative magnetoresistance in GdI2" (in en). Journal of Alloys and Compounds 303-304: 252–256. doi:10.1016/S0925-8388(00)00668-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S092583880000668X. பார்த்த நாள்: 2022-07-08. 
  4. Michaelis, C.; Mattausch, H.; Simon, A. LnHal2Hn - new phases in the ternary system lanthanide/halogen/hydrogen. II: preparation. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1992. 610: 23-27. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-2313.
  5. C. Michaelis, W. Bauhofer, H. Buchkremer-Hermanns, R. K. Kremer, A. Simon, G. J. Miller (December 1992). "LnHal2Hn – Neue Phasen in den ternären Systemen Ln/Hal/H (Ln = Lanthanoid, Hal = Br, I) III. Physikalische Eigenschaften" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 618 (12): 98–106. doi:10.1002/zaac.19926180118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19926180118. பார்த்த நாள்: 2022-07-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்_ஈரயோடைடு&oldid=3765816" இலிருந்து மீள்விக்கப்பட்டது