கடைசி இலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"தி லாஸ்ட் லீப் (கடைசி இலை)"
ஆசிரியர்ஓ ஹென்றி
தொடக்கத் தலைப்பு"ஹக்கர்டு லீப்"
நாடுUnited States
மொழிஆங்கிலம்
வகை(கள்)சிறுகதை
வெளியிடப்பட்ட காலம்"தி திரைம்முடு லேம்ப் அன்ட் அதர் ஸ்டோரிஸ்" (The Trimmed Lamp and Other Stories)
வெளியிட்ட நாள்1907

"கடைசி  இலை" என்பது ஓ. ஹென்றி எழுதிய சிறுகதையாகும்.[1] இக்கதை 1907 ஆண்டு வெளியிட்ட "தி திரைம்முடு லேம்ப் அன்ட் அதர் ஸ்டோரிஸ்" என்ற (தமிழில்:அழகான விளக்கும்  பிற கதைகளும்) என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ] இக்கதை கிரீன்விச் கிராமத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. கதையின்படி ஒரு ஓவியர் இளங்கலைஞரை காப்பாற்றுகிறார். ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் இருக்கிறார். அவர்  ஜன்னல் வழியே ஒரு கொடியில் உள்ள இலைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையை உதிர்ந்துகொண்டு வருகிறது. கடைசி இலை உதிரும் பொழுது தான் இறந்துவிடுவதாக நினைத்துகொண்டு படுத்திருக்கிறார்.அன்றைய தினம் கடுங்காற்றுடன் கூடிய  மழை பெய்கிறது. விடிந்து பார்க்கிறார். அந்த ஒரு இலை உதிராமல் இருக்கிறது. நோயாளி நம்பிக்கை கொள்கிறார். அந்த இலை உண்மையான இலை இல்லை, இலையைப் போல தோற்றம் அளிக்குமாறு ஓவியத்தை வரைந்தவர் அந்த ஓவியர்.

தழுவல்கள்[தொகு]

"கடைசி இலை"க் கதையைத் தழுவி தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. 

  • 1912 இல் "பாலிங் லீப்ஸ்" (en:Falling Leaves)
  • 1917 இல் டூ ரீல் சைலன்ட்
  • 1952  ஆம் ஆண்டு  ஐந்து கதைகளை தழுவி "ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் (முழுமையான வீடு) என்கிற தொகுப்பு வெளியானது. இந்த தழுவல், கதாநாயகன் புனைப்பெயர் ஜோ, மற்றும் நாயகி சூசன் (சூ) சித்தரிக்கப்பட்டது. இதில் சூசன் சகோதரியாக சித்தரிக்கப்பட்டார்.
  • 1983 இல் ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் படத்தினை தழுவி இயேசு கிறிஸ்துவின் கடந்த நாட்களும் சாதுக்களும் (en:The Church of Jesus Christ of Latter-day Saints) படம் வந்தது. இது 24 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாகும்.
  • 2013 இல் வெளிவந்த இந்தி படமான லூதெரா, இச்சிறுகதையை மையமாகக் கொண்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. [அமெரிக்க இலக்கிய உலகம் கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர்... ஓ.ஹென்றி பிறந்த தினப் பகிர்வு! - விகடன் - 11.09.2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைசி_இலை&oldid=2769812" இருந்து மீள்விக்கப்பட்டது